இனி இந்த ஊர்களிலும் BIS ஹால்மார்க் கட்டாயம்.! தங்கம் வாங்குபவர்கள் உஷாரா இருங்க.!

Published : Mar 06, 2026, 12:05 PM IST

மத்திய அரசு தங்க நகைகளுக்கான BIS ஹால்மார்க் முறையை மேலும் பல புதிய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை தங்கத்தின் தூய்மையை உறுதி செய்வதோடு, வாடிக்கையாளர்களை மோசடியிலிருந்து பாதுகாக்கிறது.

PREV
17
தங்க ஹால்மார்க் விதி

நாட்டில் தங்க நகை வாங்கும் மக்களுக்கு பாதுகாப்பும் நம்பகத்தன்மையும் வழங்கும் நோக்கில் மத்திய அரசு தங்க பிஐஎஸ் (BIS) ஹால்மார்க் முறையை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. 2026ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், நாட்டின் பல புதிய மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் செயல்படும் நகைக்கடைகள், BIS ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்ய அனுமதி இல்லை.

27
தங்கம் வாங்கும் விதிமுறைகள்

இந்த முடிவு மூலம் தங்க நகைகளின் தூய்மை குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெளிவான உறுதி கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. சந்தையில் குறைந்த தரம் கொண்ட தங்கம் அல்லது போலி நகைகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், நகை வணிகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்று கூறப்படுகிறது.

37
ஹால்மார்க் தங்கம்

தங்க ஹால்மார்க் என்பது தங்கத்தின் தூய்மையை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும் அடையாளமாகும். இந்தியாவில் இந்த முறையை Bureau of Indian Standards (BIS) நிர்வகிக்கிறது. தற்போது 14 காரட், 18 காரட் மற்றும் 22 காரட் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக உள்ளது. நகையில் ஹால்மார்க் முத்திரை இருந்தால், அந்த நகை BIS தரநிலைக்கு ஏற்ப பரிசோதிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும்.

47
ஹால்மார்க் நகைகள்

ஹால்மார்க் நகைகளை விற்பனை செய்ய விரும்பும் நகைக்கடைகள் முதலில் BIS-ல் பதிவு செய்ய வேண்டும். பின்னர் நகைகள் BIS அங்கீகரித்த மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்படுகின்றன. பரிசோதனையில் தரநிலைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே அந்த நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்கப்படும்.

57
ஹால்மார்க் முறை

இந்த ஹால்மார்க் முறை முதன்முதலில் 2021 ஜூன் 23ஆம் தேதி நாட்டின் 256 மாவட்டங்களில் கட்டாயமாக்கப்பட்டது. தற்போது 2026 அப்டேட்டின் மூலம் மேலும் பல மாவட்டங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

67
புதிய மாவட்டங்கள்

புதிதாக சேர்க்கப்பட்ட மாவட்டங்களில் ராஜஸ்தானின் பீவார், தித்வானா-குச்சமன், பூண்டி, கரௌலி, பார்மர், துங்கர்பூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். மேலும் குஜராத்தில் பொடாட், தேவபூமி துவாரகா, கிர் சோம்நாத், மோர்பி, தபி மாவட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் கடக், ராய்ச்சூர், விஜயபுரா, சிக்கமகளூரு மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

77
நகை வாங்கும் மக்கள்

மேலும் தெலங்கானாவில் மஞ்சேரியல், பெத்தபள்ளி, பத்ராத்ரி கொத்தகுடெம் மற்றும் ஒடிசாவில் நாயகர், சுந்தர்கர் ஆகிய மாவட்டங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த மாற்றம் தங்க நகை வாங்கும் மக்களுக்கு கூடுதல் நம்பிக்கையை வழங்கும் என்றும், சந்தையில் மோசடி வாய்ப்புகளை குறைக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories