ஜிடிபி பங்களிப்பில் மாநிலங்களின் பங்கு எவ்வளவு? தமிழ்நாட்டை முந்திய மாநிலம் எது?

First Published | Dec 20, 2023, 7:55 PM IST

CSLA புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் ஜிடிபியில் மாநிலங்களின் பங்களிப்பு அடிப்படையில் உத்தரபிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு 3வது இடத்தைப் பெற்றுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் தமிழ்நாட்டை நூலிழையில் முந்தி இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது.

GDP

முதல் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தபடியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உ.பி.யின் பங்கு அதிகமாக உள்ளது.

Tap to resize

CSLA (கிரெடிட் லியோனைஸ் செக்யூரிட்டீஸ் ஆசியா) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் ஜிடிபியில் மாநிலங்களின் பங்களிப்பு அடிப்படையில் உத்தரபிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

நாட்டின் மொத்த ஜிடிபியில் 15.7 சதவீதத்தைக் கொண்டிருக்கும் மகாராஷ்டிரம மாநிலம் வரிசையில் முன்னிலை வகிக்கிறது. உத்தரப் பிரதேசம் 9.2 சதவீதத்துடன் அடுத்த இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு 9.1 சதவீதம் ஜிடிபி பங்களிப்புடன் நூலிழையில் இரண்டாவது இடத்தை உ.பி.யிடம் பறிகொடுத்திருக்கிறது. குஜராத் (8.2 சதவீதம்), மேற்கு வங்கம் (7.5 சதவீதம்), கர்நாடகா (6.2 சதவீதம்), ராஜஸ்தான் (5.5 சதவீதம்), ஆந்திரப் பிரதேசம் (4.9 சதவீதம்), மத்தியப் பிரதேசம் (4.6 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

Latest Videos

click me!