ஆனால் இதற்கு, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் ரேஷன் கார்டை எல்பிஜி ஐடியுடன் இணைக்க வேண்டும். அப்போதுதான் இந்தச் சலுகையைப் பெற அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தற்போது ராஜஸ்தானில் 1,07,35000 குடும்பங்கள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் 37 லட்சம் குடும்பங்களுக்கு பிபிஎல் மற்றும் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏற்கனவே பலன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே இப்போது மீதமுள்ள 68 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.