Fixed Deposit Interest Rate in Public Sector Banks
பிக்ஸட் டெபாசிட் மூலம் உங்கள் சேமிப்பை அதிகரிக்க விரும்புகிறீர்களா? பல பொதுத்துறை வங்கிகள் தற்போது ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இத்தொகுப்பில் வட்டி விகிதங்கள் அடிப்படையில் டாப் 5 பொதுத்துறை வங்கிகளைப் பார்க்கலாம்.
Central Bank of India Fixed Deposit
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 444 நாட்களுக்கு 7.45% வட்டி விகிதம் கிடைக்கிறது. 1 வருட பிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு 6.85% வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு 6.75%, 5 ஆண்டுகளுக்கு 6.50% வழங்கப்படுகிறது.
Union Bank of India Fixed Deposit
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 333 நாட்களுக்கு 7.40% வட்டி கிடைக்கும். 1 வருட பிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.80%, 3 ஆண்டு பிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.70%, 5 ஆண்டு பிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.50% வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Bank of Baroda Fixed Deposit
பாங்க் ஆப் பரோடாவில் 399 நாட்களுக்கு 7.30% வட்டி வழங்கும் மழைக்கால தமாகா திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. 1 வருட FD திட்டத்தில் 6.85%, 3 ஆண்டு FD திட்டத்தில் 7.15% மற்றும் 5 ஆண்டு FD திட்டத்தில் 6.50% வட்டி தரப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 4.75% முதல் 7.80% வரை இருக்கும். இந்த வட்டி விகிதங்கள் செப்டம்பர் 5, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
Indian Overseas Bank Fixed Deposit
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 444 நாட்களுக்கு பிக்ஸட் டெபாசிட் கணக்கில் முதலீடு செய்தால் 7.30% வட்டி தருகிறது. மேலும், ஒரு வருடத்திற்கான FD திட்டத்தில் 7.10%, 3 மற்றும் 5 ஆண்டு FD திட்டத்தில் 6.50% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
Punjab & Sind Bank Fixed Deposit
பஞ்சாப் & சிந்து வங்கியில் 666 நாட்களுக்கான பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் 7.30% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 3 ஆண்டு பிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.30%, 5 வருட பிக்ஸட் டெபாசிட்டுக்கு 6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.