பான் மசாலா, சிகரெட் மற்றும் புகையிலை ஆகியவற்றின் விலை பிப்ரவரி 1ம் தேதி முதல் உயரக்கூடும். சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீது மத்திய அரசு ஜிஎஸ்டி, கலால் வரி மற்றும் செஸ் உட்பட அதிக வரிகளை விதிக்கிறது.
2026ம் ஆண்டின் ஜனவரி முடிந்து பிப்ரவரி மாதம் நாளை தொடங்க உள்ளது. பிப்ரவரி 1ம் தேதி முதல் ஃபாஸ்டேக் விதிகள் முதல் சிகரெட் விலை அதிகரிப்பு முதல் பல்வேறு மாற்றங்கள் நடைபெற உள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஃபாஸ்டேக் (FASTag) புதுப்பிப்பு
ஃபாஸ்டேக்கிற்கான (FASTag) KYC சரிபார்ப்பு செயல்முறை முழுமையாக நீக்கப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 1ம் தேதி முதல், ஃபாஸ்டேக்கை ஆக்டிவேட் செய்த பிறகு கூடுதல் KYC சரிபார்ப்பு எதுவும் தேவையில்லை. ஃபாஸ்டேக்குகளை வழங்கும் வங்கிகளே வாகனத் தகவல்களைச் சரிபார்க்கும் முழுப் பொறுப்பையும் ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
23
LPG சிலிண்டர் விலை மாற்றம்
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி கேஸ் சிலிண்டர் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிப்ரவரி 1 அன்று வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியான கேஸ் சிலிண்டர்களின் புதிய விலைகள் அறிவிக்கப்படும். கடந்த மாதம் வணிக சிலிண்டர் விலை ரூ. 14.50 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாளை விலை மேலும் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விமான எரிபொருள் விலையும் உயருகிறது
சமையல் எரிவாயு விலையை போன்று சிஎன்ஜி, பிஎன்ஜி மற்றும் விமான எரிபொருள் விலைகளும் பிப்ரவரி 1 முதல் மாற வாய்ப்புள்ளது. விமான எரிபொருள் விலை உயர்ந்தால் விமான கட்டணமும் உயரக்கூடும். இந்த விலையேற்றம் போக்குவரத்து மற்றும் பயணச் செலவுகளை அதிகரிக்கக்கூடும்.
33
பான் மசாலா, சிகரெட் மற்றும் புகையிலை விலை உயரும்
பான் மசாலா, சிகரெட் மற்றும் புகையிலை ஆகியவற்றின் விலை பிப்ரவரி 1ம் தேதி முதல் உயரக்கூடும். சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீது மத்திய அரசு ஜிஎஸ்டி, கலால் வரி மற்றும் செஸ் உட்பட அதிக வரிகளை விதிக்கிறது. பான் மசாலா மீது கூடுதல் சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான வரிகளும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 1, 2026 அன்று நடைமுறைக்கு வரும் மாற்றங்கள், சாதாரண குடிமக்களின் நிதிநிலை, செலவுகள் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றை நேரடியாகப் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் நாளை (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட்டில் புதிய முதலீடுகள் மற்றும் அரசுத் திட்டங்களில் புதிய அறிவிப்புகள் வெளியாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.