டோல்கேட்டில் FASTag சிக்கலா? இனி இப்படி செய்தால் 50% பணம் மிச்சம்.. புது ரூல்ஸ் தெரிஞ்சிக்கோங்க!

Published : Mar 19, 2026, 10:02 PM IST

FASTag New Rules 2026: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 2026-27-ம் ஆண்டுக்கான புதிய FASTag விதிகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
தேசிய நெடுஞ்சாலை ஆணைய புது ரூல்ஸ்

கோடை விடுமுறை அல்லது வீக்-எண்ட் 'ரோடு ட்ரிப்' எதுவாக இருந்தாலும், FASTag வந்த பிறகு ஹைவே பயணம் வேகமெடுத்துவிட்டது. ஆனால், சில சமயம் பேலன்ஸ் இருந்தும் ஸ்கேன் ஆகாது, தேவையில்லாமல் இரண்டு மடங்கு அபராதம் கட்ட வேண்டியிருக்கும். இந்தச் சிக்கல்களைத் தவிர்க்க, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 2026-27-ம் ஆண்டுக்கான விதிகளில் சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த விதிகளைத் தெரிந்தால் உங்கள் பணமும் மிச்சமாகும், மன உளைச்சலும் குறையும்.

24
இரண்டு மடங்கு டோல்

பலர் ஃபாஸ்டேக்கை காரின் கண்ணாடியில் ஒட்டாமல், டேஷ்போர்டில் வைப்பார்கள் அல்லது கையில் பிடித்து ஸ்கேன் செய்ய முயற்சிப்பார்கள். ஆனால் இனி உங்கள் ஃபாஸ்டேக் காரின் விண்ட்ஸ்கிரீனில் (முன் கண்ணாடி) உள்ளிருந்து சரியான இடத்தில் ஒட்டப்படவில்லை என்றால், உங்கள் கணக்கில் பணம் இருந்தாலும் இரண்டு மடங்கு டோல் வசூலிக்கப்படும். எனவே, பயணத்தைத் தொடங்கும் முன், அது சரியாக ஒட்டப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கவும்.

பணத்தை நிச்சயம் மிச்சப்படுத்தும்

இந்த விதி 90% பயணிகளுக்குத் தெரிவதில்லை. சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, ஒரு தேசிய நெடுஞ்சாலையில் பழுதுபார்ப்பு அல்லது விரிவாக்கப் பணிகள் நடந்தால், பயணிகளிடமிருந்து முழு டோல் கட்டணத்தையும் வசூலிக்க முடியாது. அப்படிப்பட்ட சமயங்களில், நீங்கள் 50% (பாதித் தொகை) மட்டுமே டோல் செலுத்தினால் போதும். இந்த விதி உங்கள் பணத்தை நிச்சயம் மிச்சப்படுத்தும்.

34
UPI பயன்படுத்துவது லாபகரமானது

உங்கள் காரில் ஆக்டிவ் ஃபாஸ்டேக் இல்லை என்றால், ரொக்கமாகப் பணம் செலுத்தினால் முன்பு போலவே இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால், டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிக்க, அரசு ஒரு நல்ல வழியைக் கொண்டு வந்துள்ளது. ரொக்கத்திற்குப் பதிலாக நீங்கள் UPI மூலம் பணம் செலுத்தினால், இரண்டு மடங்குக்கு பதில் 1.25 மடங்கு (125%) கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். எனவே, கையில் இருந்து அதிகப் பணம் போவதை விட UPI பயன்படுத்துவது லாபகரமானது.

44
வருடாந்திர பாஸ்

ஒரே டோல் பிளாசாவை அடிக்கடி கடந்து செல்லும் பயணிகளுக்கு வருடாந்திர பாஸ் (Annual Pass) வசதியானது. NHAI, 2026-27-ம் ஆண்டுக்கான இந்த பாஸ் கட்டணத்தை 75 ரூபாய் உயர்த்தி, புதிய விலையாக 3,075 ரூபாயை நிர்ணயித்துள்ளது. இந்த பாஸ் மூலம், நீங்கள் ஒரு வருடத்தில் 200 முறை டோலைக் கடக்கலாம். இது அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் சிக்கலைத் தீர்க்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories