Fact Check: புதிய 350 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகள் வந்திருக்கா? தீயாய் பரவும் போட்டோஸ்!

First Published | Jan 23, 2025, 11:30 PM IST

RBI on new currency notes: இந்தியாவில் கரன்சி நோட்டுகளை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கிக்குதான் அதிகாரம் உள்ளது. இந்நிலையில் புதிய 350 ரூபாய் நோட்டுகளையும் 5 ரூபாய் நோட்டுகளையும் அறிமுகம் செய்திருப்பதாகத் தகவல் பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆர்பிஐ பதில் அளித்துள்ளது.

New Currency Notes

புதிய கரன்சி நோட்டுகள் வெளியாகியுள்ளதா? இந்தியாவில் கரன்சி நோட்டுகளை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கிக்குதான் அதிகாரம் உள்ளது. ரிசர்வ் வங்கி தேவைப்படும்போது புதிய நோட்டுகளை வெளியிடுகிறது. இந்நிலையில் புதிய 350 ரூபாய் நோட்டுகளையும் 5 ரூபாய் நோட்டுகளையும் அறிமுகம் செய்திருப்பதாகத் தகவல் பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆர்பிஐ பதில் அளித்துள்ளது.

Fake Currency Notes

2023ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டை வாபஸ் பெற்றது. இதனால் ரூ.500 ரூபாய் நோட்டு நாட்டின் மிகப்பெரிய மதிப்புள்ள கரன்சி நோட்டாக மாறியது. இந்நிலையில், தற்போது, ​​350 மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டதாகக் கூறி சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.


ஆனால் வைரலாகும் படங்கள் புதியவை அல்ல. இதே போன்ற படங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்தன. இவை அனைத்தும் போலியான ரூபாய் நோட்டுகள். புதிய ரூபாய் நோட்டு எதையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. தற்போது ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகள் மட்டுமே உள்ளன.

Fake Currency Notes

புதிதாக வடிவமைக்கப்பட்ட ரூ.5 நோட்டுகள் எதுவும் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை. 2 மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது. ஆனால் சந்தையில் தற்போதுள்ள நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகின்றன.

Fake Currency Notes

"இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ஒவ்வொரு ரூபாய் நோட்டுகளும் (ரூ. 2, ரூ. 5, ரூ. 10, ரூ. 20, ரூ. 50, ரூ. 100, ரூ. 200, ரூ. 500), புழக்கத்தில் இருக்கும் வரை எந்த இடத்திலும் செல்லுபடியாகும்" என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 26 இன் மூலம் இதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் என்று ஆர்பிஐ கூறுகிறது.

Latest Videos

click me!