ஃபாஸ்டேக்கின் முக்கிய நோக்கம் என்ன?
சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்தும் போது வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்கக் கூடாது என்பதற்காக இந்த ஃபாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டது. இதற்காக வாகன கண்ணாடிகளில் ஃபாஸ்டேக் கார்டு ஒட்டப்படுகிறது. இதன் மூலம் சுங்கச்சாவடியை கடக்கும்போது தானாகவே கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும். இதன் மூலம் காண்டாக்ட்லெஸ் பேமெண்ட் சாத்தியமாகும். டேக் ஸ்கேன் செய்தவுடன் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும். நேரம் மற்றும் எரிபொருள் மிச்சமாகும். ஃபாஸ்டேக்கை மொபைல் வாலெட்கள், நெட் பேங்கிங், யூபிஐ, கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.