ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்.. பென்ஷன் தொகை உயருகிறதா? நாடாளுமன்ற நிலைக்குழு சொன்ன குட்நியூஸ்!

Published : Mar 17, 2026, 10:17 PM IST

EPS Minimum Pension Increase: இன்றைய விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுகளோடு ஒப்பிடும்போது பென்ஷன் தொகை மிக மிகக் குறைவு என நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

PREV
14
மாதாந்திர பென்ஷன் தொகையை உயர்த்த கோரிக்கை

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) பென்ஷன் வாங்குபவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வந்திருக்கிறது. மத்திய அரசின் தொழிலாளர் நலன், ஜவுளி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, இன்று ஒரு முக்கிய அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் 1995 (EPS-95) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர பென்ஷன் தொகையை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று வலுவாகப் பரிந்துரைத்துள்ளது.

24
நாடாளுமன்றக் குழு சொன்னது என்ன?

தற்போது, இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக மாதம் ₹1,000 மட்டுமே பென்ஷன் வழங்கப்படுகிறது. இன்றைய விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுகளோடு ஒப்பிடும்போது, இந்தத் தொகை மிக மிகக் குறைவு. ஒருவரின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இது போதாது என்று நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

34
ரூ.7,500 ஆக உயருகிறதா?

சமீபத்தில், மார்ச் 9 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய ஓய்வூதியதாரர்கள், குறைந்தபட்ச மாதாந்திர பென்ஷனை ₹7,500 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், மத்திய அரசு பட்ஜெட் மூலம் இந்தத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான வழிகளை ஆராய வேண்டும் என்றும் குழு தெரிவித்துள்ளது.

44
கிக் ஊழியர்கள் முதல் சுரங்கப் பாதுகாப்பு வரை

பென்ஷன் உயர்வு மட்டுமல்லாமல், தொழிலாளர் நலன் சார்ந்த பல முக்கியப் பரிந்துரைகளையும் இந்தக் குழு முன்வைத்துள்ளது. அவற்றை கிழே பார்ப்போம்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள்: நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்பட்டால், இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, அவர்களுக்கு இஎஸ்ஐ (ESI) மற்றும் பிஎஃப் (PF) பலன்கள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கிக் ஊழியர்கள் (Gig Workers): ஸ்விக்கி, ஸொமேட்டோ, ஓலா, ஊபர் போன்ற ஆன்லைன் தளங்களில் பணிபுரியும் கிக் ஊழியர்களை 'இ-ஷ்ரம்' (e-Shram) போர்ட்டலில் பதிவு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும். அவர்களுக்கு இன்சூரன்ஸ் மற்றும் விபத்து இழப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்பு வசதிகளை வழங்க வேண்டும்.

சுரங்கப் பாதுகாப்பு: நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத சுரங்கங்கள் குறித்த முழுமையான தரவுத்தளத்தை (Database) உருவாக்க வேண்டும். சட்டவிரோத சுரங்கப் பணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

ESI வரம்பு விரிவாக்கம்: அதிகமான தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு கிடைக்க, இஎஸ்ஐசி (ESIC) திட்டத்தின் கீழ் உள்ள சம்பள வரம்பை மாற்றி அமைக்கும் பணிகளை வேகப்படுத்த வேண்டும்.

நிதி ஒழுங்கு: தொழிலாளர் நல அமைச்சகம், பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதிக்கும், செலவழிக்கப்படும் தொகைக்கும் இடையே ஒரு சமநிலையைப் பராமரிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories