EPFO கணக்குதாரர்களுக்கு குட் நியூஸ்! படிவம் 13 சாப்ட்வேரில் புதிய அப்டேட்!

Published : Apr 26, 2025, 03:11 PM IST

வேலை மாறும்போது PF கணக்கு மாற்றம் எளிதாகிறது. புதிய அலுவலக ஒப்புதல் பெரும்பாலும் தேவையில்லை. இந்த புதிய நடைமுறை 1.25 கோடி உறுப்பினர்களுக்கு பயனளிக்கும்.

PREV
14
EPFO கணக்குதாரர்களுக்கு குட் நியூஸ்! படிவம் 13 சாப்ட்வேரில் புதிய அப்டேட்!
Employees Provident Fund Organisation (EPFO)

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பான EPFO, PF கணக்கு பரிமாற்றம் தொடர்பாக ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இது 1.25 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு பயனளிக்கும். பணிபுரியும் அலுவலகத்தை மாற்றுவது மேலும் எளிமையாகிறது. இது தொடர்பாக வெள்ளிக்கிழமை வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வேலை மாறும்போது PF கணக்கை மாற்ற, புதிய அலுவலகத்தின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை.

24
EPFO PF Transfer

EPFO உறுப்பினர்களின் பென்ஷன் கணக்கு மாற்றத்தை எளிதாக்க இந்த ஆண்டு ஜனவரி முதல் புதிய வசதி உள்ளது. வேலை மாறும்போது, பிஎஃப் கணக்கை மாற்றுவதற்கான செயல்முறையை EPFO பெரிதும் எளிதாக்கியுள்ளது. இதன்படி பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கணக்கை மாற்ற புதிய அலுவலகத்தின் ஒப்புதல் தேவை இல்லை.

இதுவரை PF கணக்கை மாற்றுவது இரண்டு அலுவலகங்களின் ஒப்புதலுடன் நடந்து வந்தது. இப்போது, ​​EPFO ​​புதுப்பிக்கப்பட்ட படிவம் 13 மென்பொருளைக் கொண்டுவந்திருக்கிறது. இதன் மூலம் இரண்டு ஒப்புதல்களைப் பெறவேண்டிய தேவையை நீங்கியுள்ளது.

34
EPFO PF Account Transfer

விரைவான மாற்றம்:

இனிமேல், கணக்குப் பரிமாற்றம் செய்வதற்கான கோரிக்கை தற்போதைய அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்டவுடன், கணக்கு தானாகவே புதிய அலுவலகத்திற்கு மாற்றப்படும்.

இன்னும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த புதுப்பிக்கப்பட்ட செயல்பாடு, PF வட்டி மீதான TDS-ஐ துல்லியமாகக் கணக்கிடுவதற்கு வசதியாக இருக்கும். இந்த நடவடிக்கை 1.25 கோடிக்கும் அதிகமான EPFO உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.90,000 கோடி கணக்குப் பரிமாற்றத்தை எளிதாக்க உதவும். முழு பரிமாற்ற செயல்முறையும் விரைவுபடுத்தப்படும்.

44
UAN Generation Without Aadhaar

ஆதார் தேவையில்லை:

இது தவிர, UAN உருவாக்கத்திற்கு ஆதார் கார்டு தேவை என்ற விதியையும் தளர்த்த EPFO ​​முடிவு செய்துள்ளது. உறுப்பினர் ஐடி மற்றும் பதிவில் உள்ள பிற உறுப்பினர் தகவல்களின் அடிப்படையில் UAN-களை மொத்தமாக உருவாக்குவதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அத்தகைய உறுப்பினர்களின் கணக்குகளில் நிதியை உடனடியாக வரவு வைக்க முடியும்.

ஆனால், PF கணக்கைப் பாதுகாப்பதற்காக, அத்தகைய அனைத்து UAN-களும் தற்காலிகமாக முடக்கப்பட்ட நிலையில் வைக்கப்படும். ஆதார் இணைக்கப்பட்ட பின்னர் செயல்பாட்டுக்கு வரும்.

Read more Photos on
click me!

Recommended Stories