வேலை பார்க்கும்போதே பென்ஷன் வேணுமா? நீங்க செய்யவேண்டியது இதுதான்!

First Published | Nov 3, 2024, 2:56 PM IST

ஒருவர் 58 வயதிற்குப் பிறகும் பணிபுரிந்தால், அவர் தொடர்ந்து EPS ஓய்வூதியத்தைப் பெறுவார். அதாவது, வேலையில் இருக்கும்போதே ஓய்வூதியப் பணத்தைப் பெறலாம்.

EPFO rules

EPS எனப்படும் ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிர்வகிக்கப்படுகிறது. 58 வயதில் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இத்திட்டம் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், ஒருவர் 58 வயதிற்குப் பிறகும் தொடர்ந்து பணிபுரிந்தால், அவருக்கு EPS ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்கும். அதாவது, வேலையில் இருக்கும்போதே பென்ஷன் கிடைக்கும்.

EPS pension

இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12% பிடித்தம் செய்யப்படுகிறது. அதே தொகையை அவர் பணிபுரியும் நிறுவனமும் பங்களிக்கிறது. முழு பங்களிப்பும் EPF கணக்கிற்குச் செல்கிறது.

இத்திட்டம் 1952ஆம் ஆண்டு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தின் கீழ் வரும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும்.

Tap to resize

Employees Pension

EPFO உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே EPS ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற முடியும். EPFO விதிகளின்படி, ஒவ்வொரு பணியாளரும் குறைந்தது 10 ஆண்டுகள் பங்களிப்பைத் தொடர வேண்டும். பணி ஓய்வு பெற்று, அல்லது 50 வயதுக்கு மேல் ஓய்வூதியம் பெறலாம்.

மொத்த பணிக்காலம் 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், ஓய்வூதியத்திற்காக டெபாசிட் செய்யப்பட்ட தொகையை இடையில் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம்.

EPFO Contribution

EPFO உறுப்பினராக உள்ள ஊழியர் ஒருவர் 10 வருட பணியை முடித்திருந்தாலும் அவரது வயது 50 வயதுக்கு குறைவாக இருந்தால், அவர் ஓய்வூதியத்தை கோர முடியாது. அத்தகைய சூழ்நிலையில், வேலையை விட்டு வெளியேறினால், EPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட நிதி மட்டும்தான் கிடைக்கும்.

ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் மற்றும் அவரது வயது 50 முதல் 58 வயது வரை இருந்தால், அவர் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆவார். ஆனால் அவர் ஓய்வூதியமாக பெறும் தொகை குறைவாக இருக்கும். 10 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால், 50 வயதிற்குப் பிறகு, முன்கூட்டியே ஓய்வூதியத்தைக் கோரலாம்.

Pension planning

முன்கூட்டியே ஓய்வூதியத்தைக் கோரினால், ​​ஒவ்வொரு ஆண்டுக்கும் ஓய்வூதியத்தில் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது. உதாரணமாக, 55 வயதில் மாதாந்திர ஓய்வூதியத்தை பெற விண்ணப்பித்தால், ஓய்வூதியத் தொகையில் 88% (100% - 3×4) தான் கிடைக்கும்.

உடல் ஊனமுற்றால் ஓய்வூதியம் பெறும் வசதியும் இத்திட்டத்தில் உள்ளது. பணிபுரியும் காலத்தில் நிரந்தரமாக ஊனமுற்ற ஊழியர்களுக்கு இதன் மூலம் நிதி உதவி கிடைக்கும். ஓய்வூதிய நிதிக்கு 10 ஆண்டுகள் பங்களிக்க வேண்டும், 50 வயது  நிரம்பியிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் இதற்குப் பொருந்தாது. EPS கணக்கில் 2 ஆண்டுகள் பங்களித்திருந்தால் கூட ஓய்வூதியம் பெற முடியும்.

Latest Videos

click me!