பிரதமரின் விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ரூ.15,000 நிதியுதவியை பெற, UAN எண்ணை ஆக்டிவேட் செய்வதும், DBT வசதியை வங்கிக் கணக்கில் இணைப்பதும் கட்டாயம் என EPFO தெரிவித்துள்ளது.
EPFO-வின் அதிரடி அப்டேட்: அரசு தரும் ரூ.15,000 பெறுவது எப்படி?
தனியார் நிறுவனங்களில் புதிதாக வேலைக்குச் சேரும் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. இளைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கவும் 'பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா' (PMVBRJY) திட்டத்தை EPFO தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நிதியுதவியைப் பெற, ஊழியர்கள் சில முக்கிய நடைமுறைகளை முடிக்க வேண்டும் என EPFO தற்போது உத்தரவிட்டுள்ளது.
26
PMVBRJY திட்டம்: முழு விவரங்களும், பலன்களும் இதோ!
பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தில் இந்தத் திட்டத்தை அறிவித்தார். இதன் மூலம், முதல் முறையாக வேலைக்குச் சேரும் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ₹15,000 வரை நிதியுதவி கிடைக்கும். இந்தத் தொகை இரண்டு தவணைகளாக நேரடியாக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஆகஸ்ட் 1, 2025 முதல் ஜூலை 31, 2027 வரை வேலைக்குச் சேர்ந்து, இதற்கு முன் EPFO அல்லது விலக்கு பெற்ற டிரஸ்ட்களில் உறுப்பினராக இல்லாதவர்கள் இத்திட்டத்திற்கு முழு தகுதியானவர்கள். முதல் தவணையைப் பெற, அதே நிறுவனத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டும்.
36
நிறுவனங்களுக்கும் இதன் மூலம் பெரிய லாபம்!
இந்தத் திட்டம் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது. ஒவ்வொரு கூடுதல் ஊழியருக்கும் மாதம் ₹3,000 வரை ஊக்கத்தொகையை அரசு நிறுவனங்களுக்கு வழங்குகிறது. இதனால், வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு, புதிய ஊழியர்களை நியமிக்க நிறுவனங்களும் ஆர்வம் காட்டும்.
மத்திய அரசின் ஊக்கத்தொகை நேரடியாக உங்கள் கணக்கிற்கு வர, ஊழியர்கள் தங்கள் யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பரை (UAN) கட்டாயம் ஆக்டிவேட் செய்ய வேண்டும். EPFO போர்ட்டலுக்குச் சென்று உங்கள் மொபைல் எண் மற்றும் தனிப்பட்ட விவரங்களைச் சரிபார்க்கவும். பிறகு, EPFO அங்கீகரித்த செயலி அல்லது சிஸ்டம் மூலம் ஃபேஸ் ஆதென்டிகேஷன் (முக அங்கீகாரம்) செய்து டிஜிட்டல் சரிபார்ப்பை முடிக்க வேண்டும். இது பயோமெட்ரிக் செயல்முறையை வேகமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுகிறது.
56
வங்கிக் கணக்கில் DBT வசதி மிக முக்கியம்!
இத்திட்டத்தின் பணம், நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) முறையில் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே, உங்கள் வங்கிக் கணக்கு NPCI உடன் இணைக்கப்பட்டு, DBT வசதி ஆக்டிவாக உள்ளதா என சரிபார்க்கவும். DBT வசதி இல்லையென்றால், அரசு அனுப்பும் பணம் உங்கள் கணக்கில் சேராது. அதனால், தாமதிக்காமல் வங்கிக்குச் சென்று இந்த வசதியை ஆக்டிவேட் செய்யுங்கள்.
66
வளர்ந்த பாரதத்தை நோக்கிய முக்கிய நகர்வு
நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதும், இளைஞர்களின் பணித் திறன்களை மேம்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகையின் ஒரு பகுதியாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது புதிய வேலையில் சேரும் இளைஞர்களுக்குப் பேருதவியாக இருக்கும். தகுதியுள்ள அனைவரும் உடனடியாக தங்கள் UAN கணக்கை டிஜிட்டல் முறையில் ஆக்டிவேட் செய்து பலன் பெறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.