Elon Musk: உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்குள் ஏற்பட்ட இந்த மாற்றம் உலக முதலீட்டு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ஒரு பெரிய சரிவைச் சந்தித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சி மிகவும் கடுமையாக இருந்ததால், ஒரே வாரத்தில் தனது டிரில்லியனர் அந்தஸ்தை அவர் இழந்தார்.
27
மஸ்க்கின் சொத்து மதிப்பு
ஒரே நாளில் மஸ்க்கின் சொத்து மதிப்பு 118 பில்லியன் டாலர் (சுமார் 11 லட்சம் கோடி ரூபாய்) சரிந்துள்ளது. ஒரே வாரத்தில் அவரது சொத்து மதிப்பு 33.13 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமே, இப்போது அவரது சொத்து மதிப்பைக் குறைத்து வருகிறது.
37
மஸ்க் சந்தித்த பெரும் பின்னடைவு
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 16%க்கும் மேல் சரிந்ததால் மஸ்க் பெரும் பின்னடைவைச் சந்தித்தார். இதனால் அவர் தனது டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார். இந்த சரிவுக்குப் பிறகு, எலான் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு 957 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, மஸ்க் 957 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் நம்பர் 1 பணக்காரராகத் தொடர்கிறார். கடந்த ஜூன் 12 அன்று ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் விலை உயர்ந்தபோதுதான், மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் ஆனார்.
57
சொத்து மதிப்பு 1.32 டிரில்லியன் டாலரைத் தாண்டியது
அப்போது அவரது சொத்து மதிப்பு 1.32 டிரில்லியன் டாலரைத் தாண்டியது. ஆனால் இப்போது, ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஜூன் 16 அன்று, ஒரு பங்கின் விலை 225.64 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. ஆனால், இன்று அதன் விலை 149 டாலராகக் குறைந்துள்ளது.
67
மஸ்க்குக்கு விழுந்த இரட்டை அடி
ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய இரண்டு நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தது மஸ்க்குக்கு இரட்டை அடியாக அமைந்துள்ளது. உலக சந்தையில் AI பங்குகள் மீதான ஆர்வம் குறைந்து வருவதே ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் சரிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
77
AI துறையில் போட்டி
AI துறையில் போட்டியிடத் தேவையான பெரிய முதலீடுகளை, முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களால் தொடர்ந்து செய்ய முடியுமா என முதலீட்டாளர்கள் கவலைப்படுகின்றனர். மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் 38% பங்குகளையும், டெஸ்லாவில் 11% பங்குகளையும் வைத்துள்ளார். எனவே, இந்த பங்குச் சரிவு நேரடியாக அவரது சொத்து மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.