வீட்டிலிருந்தபடியே குறைந்த முதலீட்டில் நல்ல வருமானம் ஈட்ட ஹோம்-மேட் மில்லெட் ஸ்நாக்ஸ் தொழில் ஒரு சிறந்த வழியாகும். ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வால் ராகி, சாமை போன்ற சிறுதானிய ஸ்நாக்ஸ்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதால், பெண்கள் சிறந்த வருமானம் பெறலாம்.
இன்றைய காலகட்டத்தில் குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே நல்ல வருமானம் சம்பாதிக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை ஆமாம் என்பதே. சமூக ஊடக வளர்ச்சியால் பல புதிய சிறு தொழில்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக பெண்கள் தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி சிறந்த வருமானம் பெற முடியும். அவற்றில் ஒன்றாக தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பது ஹோம்-மேட் மில்லெட் ஸ்நாக்ஸ் (Millet Snacks Business) தொழிலாகும்.
28
வீட்டிலேயே துவங்கக் கூடிய உணவுத் தொழில்
இது வீட்டிலேயே துவங்கக் கூடிய சிறு அளவிலான உணவுத் தொழில். இன்று மக்கள் ஆரோக்கியத்தை முக்கியமாகக் கருதுகிறார்கள். சாதாரண சிப்ஸ், பிஸ்கட் போன்றவற்றிற்கு மாற்றாக, ராகி, சாமை, கேழ்வரகு போன்ற மில்லெட்களை வைத்து செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் அதிக வரவேற்பு பெறுகின்றன.
38
முதலீடு மற்றும் தேவையான பொருட்கள்
ஆரம்ப முதலீடு: ரூ. 3,000 – 5,000 வரை
தேவையான பொருட்கள்: மில்லெட் மாவு, எண்ணெய், பேக்கிங் பொருட்கள், மசாலா தூள்
கூகுள் மற்றும் யூடியூப் வழியாக ரெசிபிகளை கற்றுக்கொள்ளல் மிக எளிது.பேக்கிங் பேக்கேஜிங்கிற்கு சிறிய அளவிலான பவுச்கள், ஸ்டிக்கர் லேபிள் போன்றவை தேவை
ஒரு நாள் 10–20 பேக்குகள் விற்க முடிந்தால், மாதாந்திர இலாபம் சுமார் ரூ. 25,000–35,000 வரை கிடைக்கும். வீட்டு மகளிர், மாணவிகள் கூட இதை நேரப்பகுதி தொழிலாக துவக்கி, ஆன்லைனில் விற்பனை மூலம் இரட்டிப்பு வருமானம் பெறலாம். Instagram, WhatsApp, Facebook Marketplace போன்ற பிளாட்பாரங்களில் விற்பனை எளிமையாக முடியும்.
58
ஏன் இது சிறந்த வாய்ப்பு?
குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்
ஆரோக்கியம் சார்ந்த பொருட்களுக்கு நிலையான தேவை
பெண்களுக்கான வீட்டில் செய்வதற்கான சிறந்த தொழில் வாய்ப்பு
ஆன்லைனில் விரைவாக பரவக்கூடிய ட்ரெண்டிங் மார்க்கெட்
68
பாரம்பரிய தானியம் கைகொடுக்கும்
கேழ்வரகு, சாமை, ராகி மற்றும் பிற பாரம்பரிய அரிசி வகைகளில் நொருக்கு தீனிகளை செய்தல் அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும்.
78
குறைந்த முதலீடு கொட்டும் வருமானம்
மில்லெட் ச்நாக்ஸ்கள் இந்தியாவில் மட்டும் 2025-ஆம் ஆண்டில் ரூ. 2,79,000 மில்லியன் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளன. இது 2032-க்குள் ரூ. 4 லட்சம் மில்லியனைத் தாண்டும் என கணிக்கப்படுகிறது. தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் இந்த தொழில் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும்.
மில்லெட் ஸ்நாக்ஸ் வியாபாரம், குறைந்த முதலீட்டும், அதிகமான வருமான வாய்ப்பும் கொண்ட தொழிலாக இன்று இந்திய இளம் மற்றும் பெண் தொழிலாளர்களிடையே பெரிய ஆதரவைப் பெற்றிருக்கிறது. புதிய வாடிக்கையாளர்களை அடைவதும், தொழில் வளர்ச்சியும் வருமானத்தை அள்ளி தரும். முயற்சி செய்தால் லாபம் கட்டாயம்.
88
அதிக வருமானத்தை தரும் ஒரு சிறந்த வாய்ப்பு
இத்தகைய மில்லெட் ஸ்நாக்ஸ் தயாரிப்பு தொழில், தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் குறைந்த முதலீட்டிலான, அதிக வருமானத்தை தரும் ஒரு சிறந்த வாய்ப்பு. அதேசமயம் ஆரோக்கியம் மற்றும் இயற்கை உணவு என்ற இரண்டும் இணையும் இந்த துறைக்கு எதிர்கால வளர்ச்சி உறுதி.