ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, UIDAI புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்த உள்ளது. முக அங்கீகாரம் போன்ற வசதிகளுடன் புதிய மொபைல் ஆப் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது.
நம் நாட்டில் ஆதார் அட்டை முக்கியமான அடையாளம் ஆவணமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதன் தனிப்பட்ட தகவல்கள் ஆஃப்லைனில் பகிரப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து UIDAI பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தடுக்க, டிசம்பர் மாதத்தில் இருந்து ஆதார் அட்டை “புகைப்படம் + QR கோடு” வடிவத்தில் மட்டுமே வழங்கும் திட்டத்தை UIDAI பரிசீலித்து வருகிறது. UIDAI CEO புவனேஷ் குமார் இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்களையும் விளக்கினார்.
25
ஆதார் அட்டை விவரங்கள்
ஆதார் அட்டை அதிக அளவில் அச்சிடப்படுவது ஒரு பெரிய அபாயம். ஹோட்டல்கள், நிகழ்ச்சி நடத்தியவர்கள், கம்பெனிகள் போன்ற பல இடங்களில் மக்கள் ஆதார் நகரை டாக்குமென்டாகக் கொடுத்துவிடுகிறார்கள். இதை வைத்தே அடையாள திருட்டு மற்றும் தரவு திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக UIDAI கண்டறிந்துள்ளது. “ஆதாரை அச்சிட்டு கொடுப்பது முற்றிலும் தவறு. அட்டையில் படம், QR கோடு மட்டும் இருந்தால் போதும்” என அவர் வலியுறுத்தினார்.
35
ஆஃப்லைன் சரிபார்ப்பு முறை
ஆதார் சட்டப்படி, ஆதார் எண், பயோமெட்ரிக் அல்லது நகரை ஆஃப்லைனில் சேகரிக்க கூடாது. ஆனால் பல இடங்களில் இதை தொடர்ந்து பின்பற்றவில்லை. அதனால், டிசம்பர் 1க்கு பிறகு ஆஃப்லைன் சரிபார்ப்பு செய்யும் முறைகளை முழுமையாக ஒரு சட்ட மாற்றம் UIDAI பரிசீலிக்கிறது. இனிமேல் QR கோடு ஸ்கேன் மூலம் ஆன்லைன் அங்கீகாரம் மட்டுமே அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும்.
UIDAI தற்போது ஒரு புதிய ஆப்பை உருவாக்கி வருகிறது. இது mAadhaar ஆப்பை முழுவதும் மாற்றிவிடும். இந்த ஆப்பில் முகஅடையாள (முக அங்கீகாரம்) மூலம் மொபைல் எண் அப்டேட் செய்வது, குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது போன்ற வசதிகள் சேர்க்கப்படுகின்றன. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் விதிகளுக்கேற்றவாறு, அடையாள சரிபார்ப்பு இன்று பாதுகாப்பாக இருக்கும்.
55
எங்கே இதைப் பயன்படுத்தலாம்?
புதிய QR கோடு அங்கீகாரம் மூலம், ஹோட்டல்கள், குடியிருப்பு வளாக நுழைவு, இளைஞர்களுக்கான வயது நிரூபிப்பு, சினிமா தியேட்டர் நுழைவு, பெரிய நிகழ்ச்சிகள், உதவி பெறும் திட்டங்கள், மாணவர் சரிபார்ப்பு, நிதி நிறுவனங்கள் ஆகியவை அனைத்தும் மிகவும் எளிதாகப் பயன்படுத்தப்படுகின்றன முடியும். ஆஃப்லைன் நகல் எடுக்கவே வேண்டாத நிலை உருவாகும்.