சமையல் சூப்பரா செய்வீங்களா? மாதா மாதம் லட்சங்களில் சம்பாதிக்கலாம்! Cloud Kitchen சீக்ரெட்ஸ்.!

Published : Mar 31, 2026, 03:54 PM IST

ஆன்லைன் ஃபுட் டெலிவரி மார்க்கெட் வேகமாக வளர்ந்துட்டு இருக்கு. ஹோட்டலுக்குப் போகாம, Zomato, Swiggy வழியா நிறைய பேர் ஆர்டர் பண்றாங்க. இந்த ட்ரெண்டால, 'கிளவுட் கிச்சன்' பிசினஸ் இப்போ செம ஃபேமஸ் ஆகிட்டு வருது.

PREV
15
கிளவுட் கிச்சன் என்றால் என்ன?
கிளவுட் கிச்சன்னா, கஸ்டமர்ஸ் வந்து உட்கார்ந்து சாப்பிடற ஹோட்டல் கிடையாது. இது முழுக்க முழுக்க ஆன்லைன் ஃபுட் டெலிவரிக்காக மட்டுமே வேலை செய்யுற ஒரு கிச்சன். நீங்க வீட்ல இருந்தோ அல்லது ஒரு சின்ன இடத்துல இருந்தோ சமைச்சு, அதை ஆன்லைன் ஆப்ஸ் மூலமா கஸ்டமர்ஸுக்கு டெலிவரி பண்ணலாம். ஆப்-ல ஆர்டர் வந்ததும், நீங்க உணவைத் தயாரிச்சு டெலிவரி பார்ட்னர் கிட்ட கொடுத்தா போதும். இதனால, பெரிய ஹால், ஃபர்னிச்சர், சர்வீஸ் ஸ்டாஃப்னு எந்த செலவும் இருக்காது.
25
கிளவுட் கிச்சன் எப்படி வேலை செய்கிறது?
இந்த பிசினஸ் முழுக்க ஆன்லைன் பிளாட்ஃபார்ம்ஸை நம்பித்தான் இயங்குது. முதல்ல, உங்க பிராண்ட் பெயர்ல ஒரு மெனுவை ரெடி பண்ணனும். அப்புறம் Zomato, Swiggy போன்ற ஆப்ஸ்ல ரிஜிஸ்டர் பண்ணனும். ரிஜிஸ்டர் பண்ணதும், உங்க மெனு அந்த ஆப்-ல தெரியும். கஸ்டமர்ஸ் உங்க உணவைப் பார்த்து ஆர்டர் கொடுப்பாங்க. ஆர்டர் வந்ததும், நீங்க சமைச்சு பேக் பண்ணி வெச்சா போதும். டெலிவரி பாய் வந்து அதை கஸ்டமர் கிட்ட கொண்டு சேர்ப்பார். இப்படித்தான் இந்த பிசினஸ் நடக்குது.
35
Zomato, Swiggy-யில் விற்பனை செய்வது எப்படி?
நீங்க வீட்ல சமைக்கிற உணவை விற்கணும்னா, சில ஸ்டெப்ஸை ஃபாலோ பண்ணனும். முதல்ல, FSSAI உணவு உரிமம் வாங்கணும். இது உணவு தொழில் செய்யத் தேவையான அரசாங்க அனுமதி. அதுக்கப்புறம், Zomato, Swiggy-ல ஒரு மெர்ச்சன்ட் பார்ட்னரா (Merchant Partner) பதிவு செய்யணும். ரிஜிஸ்டர் பண்ணும்போது உங்க கிச்சன் முகவரி, லைசென்ஸ் விவரங்கள், மெனு எல்லாத்தையும் கொடுக்கணும். மெனு லிஸ்ட்ல நீங்க செய்யுற உணவுகள், விலை, நல்ல போட்டோஸ் எல்லாம் இருக்கணும். நல்ல போட்டோவும் சரியான விலையும் இருந்தா, கஸ்டமர்ஸ் அதிகமா ஆர்டர் பண்ணுவாங்க.
45
எவ்வளவு முதலீடு தேவை?
கிளவுட் கிச்சன் தொடங்க பெரிய முதலீடு தேவையில்லை. வீட்டிலேயே ஆரம்பிச்சா, சுமார் ₹30,000 முதல் ₹1 லட்சம் முதலீட்டுல தொடங்கலாம். இந்த செலவுல கிச்சன் உபகரணங்கள், கேஸ் ஸ்டவ், பாத்திரங்கள், பேக்கேஜிங் மெட்டீரியல் எல்லாம் அடங்கும். நீங்க ஸ்பெஷலான உணவுகளோட ஆரம்பிச்சா, கஸ்டமர்ஸை சீக்கிரமா ஈர்க்கலாம். உதாரணமா, ஹோம் ஸ்டைல் சாப்பாடு, பிரியாணி, டிபன் வகைகள், ஸ்நாக்ஸ் போன்றவற்றுக்கு நல்ல டிமாண்ட் இருக்கு.
55
லாபம் எப்படி இருக்கும்?
கிளவுட் கிச்சன் பிசினஸ்ல செலவுகள் குறைவுங்கிறது ஒரு பெரிய ப்ளஸ். ரெஸ்டாரன்ட் மாதிரி வாடகை, ஸ்டாஃப் சம்பளம்னு பெரிய செலவுகள் இருக்காது. ஒரு நாளைக்கு 30-லிருந்து 50 ஆர்டர்கள் வந்தாலே நல்ல வருமானம் பார்க்கலாம். சாப்பாட்டோட தரம் நல்லா இருந்து, சரியான நேரத்துக்கு டெலிவரி செஞ்சா, கஸ்டமர்ஸ் திரும்பத் திரும்ப ஆர்டர் பண்ணுவாங்க. கொஞ்ச நாள்ல உங்க பிராண்ட் ஃபேமஸ் ஆச்சுன்னா, ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான ஆர்டர்கள் கூட வரலாம். அப்போ, இந்த பிசினஸ் மூலமா மாசம் லட்சக்கணக்குல சம்பாதிக்க முடியும். மொத்தத்துல, நல்லா சமைக்கத் தெரிஞ்சவங்களுக்கு கிளவுட் கிச்சன் ஒரு சூப்பர் பிசினஸ் ஐடியா.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories