Income Tax-Free State: 1 கோடி சம்பாதித்தாலும் ஒரு ரூபாய் கூட வரி இல்லை! இந்தியாவில் இப்படி ஒரு இடமா?

Published : Jun 11, 2026, 09:02 PM IST

Income Tax-Free State: இந்தியாவில் 1 கோடி ரூபாய் சம்பாதித்தாலும் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத மாநிலம் ஒன்று உள்ளது. அது எந்த மாநிலம்? என்பது குறித்து பார்ப்போம்.

PREV
14
இந்தியாவில் வரி இல்லாத மாநிலம்

இந்தியாவில் ஒவ்வொரு நிதி ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் வருமான வரி செலுத்துகிறார்கள். சம்பளத்தில் இருந்து வரியும், TDS-ம் பிடித்தம் செய்யப்படும்போது பலருக்கும் மனது கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் நமது நாட்டில் ஒரு இடத்தில், மக்கள் 1 லட்சம் சம்பாதித்தாலும் சரி, 1 கோடி ரூபாய் சம்பாதித்தாலும் சரி, அரசாங்கத்திற்கு ஒரு ரூபாய் கூட வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா அது எந்த இடம், இந்த வரி விலக்குக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

சிக்கிம் இந்தியாவில் வரி இல்லாத மாநிலம்

நாம் பேசுவது சிக்கிம் மாநிலத்தைப் பற்றித்தான். அழகான மலைகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் பெயர் பெற்ற இந்த மாநிலம், சுற்றுலாவால் மட்டும் சிறப்புப் பெறவில்லை. இங்கு அமலில் இருக்கும் ஒரு வரி விதிமுறை, இதை மற்ற மாநிலங்களில் இருந்து முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுகிறது. ஆனால், இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சிக்கிமில் வசிக்கும் எல்லோராலும் இந்தச் சலுகையைப் பெற முடியாது. இதற்கென சில குறிப்பிட்ட நிபந்தனைகள் உள்ளன.

24
சிக்கிமிற்கு ஏன் வரி விலக்கு அளிக்கப்பட்டது?

சிக்கிம் எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. 1975-ஆம் ஆண்டு நடந்த ஒரு பொது வாக்கெடுப்புக்குப் பிறகுதான், அது இந்தியாவின் 22-வது மாநிலமாக இணைந்தது. இந்தியாவுடன் இணையும்போது, சிக்கிமின் தனித்துவமான அடையாளம், கலாச்சாரம் மற்றும் அதன் பூர்வீக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த ஏற்பாடுகளின் ஒரு பகுதியாகவே, பிற்காலத்தில் இந்த வரி விலக்கு சலுகையும் வழங்கப்பட்டது. இதனால்தான், இன்றும் அங்குள்ள தகுதியான மக்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு கிடைக்கிறது.

34
யாருக்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை?

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10(26AAA)-இன் படி, 'சிக்கிம் பூர்வீக குடிமக்கள்' மட்டுமே இந்த வரி விலக்குக்குத் தகுதியானவர்கள். அதாவது, சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும், சிக்கிமின் பூர்வீகக் குடிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும். இப்படிப்பட்ட தகுதியுள்ள நபர்கள், சில குறிப்பிட்ட வருமானங்கள், டிவிடெண்டுகள் மற்றும் வட்டி வருவாய்க்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை.

சிக்கிமில் குடியேறினால் வரி விலக்கு கிடைக்குமா?

சென்னை, டெல்லி, மும்பை அல்லது நாட்டின் வேறு எந்த நகரத்தில் இருந்தாவது ஒருவர் சிக்கிமிற்குச் சென்று வேலை செய்தாலோ அல்லது வீடு வாங்கிக் குடியேறினாலோ, அவருக்கு இந்த வரி விலக்கு கிடைக்காது. அவர் மற்ற இந்தியர்களைப் போலவே, வருமான வரி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சிக்கிமில் வசிப்பதால் மட்டுமே ஒருவருக்கு இந்த வரி விலக்கு கிடைத்துவிடாது. நீங்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவில் வரவில்லை என்றால், மற்ற இந்தியக் குடிமக்களைப் போலவே நீங்களும் வரி செலுத்த வேண்டும்.

44
இதனால் சிக்கிமிற்கு என்ன நன்மை?

மக்கள் சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதி அவர்களிடமே தங்குவதால், அதன் தாக்கம் உள்ளூர் பொருளாதாரத்திலும் நேர்மறையாகப் பிரதிபலிக்கிறது. மக்களிடம் அதிகப் பணம் இருப்பதால், உள்ளூர் சந்தைகள், சிறு தொழில்கள், சுற்றுலா மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகள் ஊக்கம் பெறுகின்றன. இந்த ஏற்பாடு ஒரு வரிச் சலுகையாக மட்டும் இல்லாமல், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகிறது.

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி ஒரு விதி உள்ளதா?

நாட்டில் வரியைச் சேமிக்க பல சட்டப்பூர்வமான வழிகள் உள்ளன. மக்கள் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் வரிச் சலுகைகளைப் பயன்படுத்துகிறார்கள். சிக்கிம் மட்டுமின்றி அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பிட்ட சில பழங்குடியின மக்களுக்கு வருமான வரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories