Dream11 Ends Sponsorship! BCCI Faces ₹119 Crore Loss
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சரான ஆன்லைன் கேமிங் நிறுவனமான ட்ரீம் 11 இந்திய அணி ஸ்பான்சர்ஷிப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளது. மத்திய அரசு ஆன்லைன் கேம்களை தடை செய்ய்யும் சட்டத்தை கொண்டு வந்துள்ளதால் ட்ரீம் 11 உடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக முறித்துள்ளது. இனி இதுபோன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என்று பிசிசிஐ உறுதிபடத் தெரிவித்துள்ளது.
25
பிசிசிஐ - ட்ரீம் 11 ஒப்பந்தம் ரத்து
செப்டம்பர் 10 அன்று துபாயில் தொடங்கும் ஆசியக் கோப்பை 2025 தொடருக்கு முன்னதாக, இந்திய அணிக்கு புதிய ஸ்பான்சரை பிசிசிஐ தேட வேண்டியுள்ளது. டொயோட்டா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இடம்பெற போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
35
பிசிசிஐ - டிரீம்11 ஒப்பந்த மதிப்பு எவ்வளவு?
2023இல் ட்ரீம் 11 நிறுவனம் பிசிசிஐயுடன் ரூ.358 கோடி மதிப்பிலான மூன்று ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தது. இதன்படி, பிசிசிஐக்கு ஆண்டுக்கு ரூ.119 கோடி வருவாய் கிடைத்தது. இந்த ஒப்பந்தம் 2026 வரை நீடிக்கவிருந்தது. ஆனால் மத்திய அரசின் சட்டம் காரணமாக இப்போது ஒப்பந்ததை முறிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ட்ரீம் 11 ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2023 நிதியாண்டில் விளம்பரம் மற்றும் விற்பனை மேம்பாட்டுக்காக ரூ.2964 கோடி செலவிட்டுள்ளது. ட்ரீம் 11 மற்றும் மைசர்கல்11 நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.5000 கோடியை மார்க்கெட்டிங், விளம்பரம் மற்றும் விற்பனை மேம்பாட்டுக்காக செலவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
55
பிசிசிஐக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும்?
ட்ரீம் 11 நிறுவனம் ஸ்பான்சர்ஷிப் பொறுப்பில் இருந்து விலகியதால், பிசிசிஐக்கு ஆண்டுக்கு ரூ.119 கோடி நஷ்டம் ஏற்படும். முதன்முறையாக பிசிசிஐ இப்படி ஒரு நஷ்டத்தை சந்திப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் புதிய ஸ்பான்சர் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்படுவதன் மூலம் பிசிசிஐ இந்த நஷ்டத்தை சரிகட்டி விடும் என பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.