GST: விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு..! பூச்சிக்கொல்லி, வேளாண் பொருட்கள் விலை குறைப்பு..! முழு லிஸ்ட் இதோ!

Published : Sep 04, 2025, 08:22 AM IST

விவசாயிகளுக்கான பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் வேளான் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

PREV
14
இந்தியாவில் ஜிஎஸ்டி குறைப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தில் விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் பல அத்தியாவசியப் பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த வரி குறைப்புகள் விவசாயிகளின் உற்பத்தி செலவைக் குறைப்பதோடு, நுகர்வோருக்கு அத்தியாவசிய பால் பொருட்களின் விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
பால் பொருட்கள் மீது ஜிஎஸ்டி குறைப்பு

அதாவது அல்ட்ரா ஹை டெம்பரேச்சர் (UHT) பால் மற்றும் பனீர் இவற்றின் மீதான 5% ஜிஎஸ்டி முழுமையாக ரத்து செய்யப்பட்டு வரி இல்லாத பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. சுண்டக் காய்ச்சிய பால், வெண்ணெய், பிற கொழுப்புகள் மற்றும் சீஸ் இவற்றின் மீதான ஜிஎஸ்டி 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்புகளால் அன்றாடம் பயன்படுத்தப்படும் பால் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும். இது குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற நுகர்வோருக்கு பெரும் பயனளிக்கும்.

34
டீசல் இன்ஜின்கள், பம்புகள் விலை குறையும்

விவசாய இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 15HP-க்கும் குறைவான ஃபிக்ஸட் ஸ்பீட் டீசல் இன்ஜின்கள், கையால் இயக்கப்படும் பம்புகள், சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பான்களுக்கான நாசில்கள், மண்ணைத் தயார் செய்வதற்கான இயந்திரங்கள், அறுவடை மற்றும் களஞ்சிய இயந்திரங்கள், உரம் தயாரிக்கும் இயந்திரங்கள், மற்றும் டிராக்டர்கள் (1800 சிசிக்கு மேல் இன்ஜின் திறன் கொண்ட சாலை டிராக்டர்கள் தவிர) ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.

44
உயிரி-பூச்சிக்கொல்லி மருந்துகள் விலை குறையும்

இதேபோல் டிராக்டர் டயர்கள், ட்யூப்கள், டீசல் இன்ஜின்கள் (250 சிசிக்கு மேல்), ஹைட்ராலிக் பம்புகள் மற்றும் பல்வேறு டிராக்டர் பாகங்கள் மீதான ஜிஎஸ்டி 18% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான உயிரி-பூச்சிக்கொல்லி மருந்துகள் மீதான ஜிஎஸ்டி 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு விவசாயிகளுக்கு நேரடி நன்மையை அளிப்பதோடு, பால் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories