இந்தியாவில் செப்டம்பர் 22 முதல் ஜிஎஸ்டி வரி மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. சிறிய ரக கார்கள் மற்றும் பைக்குகளுக்கு வரி குறைக்கப்பட்டு, பெரிய ரக வாகனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. ஆட்டோமொபைல் செக்டாரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிறிய ரக கார்கள், மற்றும் பைக்குகளுக்கு 28 சதவீதமாக இருந்த வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பெரிய ரக வாகனங்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
25
மத்திய அரசின் வரி விளையாட்டு
டிரம்ப் தொடங்கிய வரி விளையாட்டையும், எதிர்க்கட்சிகளின் உள்நாட்டு அரசியல் விளையாட்டையும் ஒரே நேரத்தில் விளையாடி வருகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரியை விதித்திருந்த நிலையில், தற்போது சொகுசு இறக்குமதி கார்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு 40 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது மறைமுகமாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மோடி வைக்கும் செக் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தள்ளனர். இந்தியாவுக்கு வரும் அமெரிக்க டெஸ்லா கார்களுக்கும் அடங்கும் என்பதுதான் அரசியல்.
35
பெரிய ரக கார்களுக்கு 40% ஜிஎஸ்டி
எம்ஜி நிறுவத்தின் ஹெக்டர், எம்ஜி குளோஸ்டர், மற்றும் போக்ஸ்வேகன் பிராண்டில் டைகுன், விர்டுஸ், டிகுவான் ஆகிய கார்களுக்கு 40 சதவீத வரி விதிப்பு விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா மற்றும் குஷாக் ஆகிய கார்களுக்கு 40 சதவீதம் வரி விதிப்பு வருகிறது.
ஆடம்பரமான சொகுசு கார்களுக்கான ஜிஎஸ்டி வரியும் 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன்படி இறக்குமதி செய்யப்பட்ட கார்கள், Dutiable தனிப்பட்ட பயன்பாட்டுக்கான கார் உள்ளிட்டவற்றுக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் இந்தியாவின் உள்ளாநாட்டு நிறுவனங்களை குஷிப்படுத்தியுள்ளன.
55
செக்கிற்கு செக் மேட்.! அவ்ளோதான் மாமு.!
1200cc க்கும் அதிகமான பெட்ரோல் இன்ஜினக்களின் மற்றும் 1500cc டீசல் இன்ஜின்கள் கொண்ட சொகுசு மற்றும் பிரீமியம் கார்களுக்கான ஜிஎஸ்டி வரியும் 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்து கார் வாங்குவோருக்கு இந்த கூடுதல் செலவு பெரிதாக இருக்காது என்றாலும், இது அமெரிக்கா போன்ற மிரட்டும் தோரனைகளுக்கு நேரடி செக் என்றே சர்வதேச அரசியல் வல்லுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.