டிஏ உயர்வு அறிவிப்புக்கு முன் அதிரடி! கிளார்க்குக்கு ரூ.57,000 கிடைக்கும்!

மத்திய அரசு சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களின் படிகளை திருத்துவதற்காக எட்டாவது ஊதியக் குழுவை (8th Pay Commission) அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

DA Hike; Rs 57,000 Increase in Lower Division Clerk Pay rag

மத்திய அரசு சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களின் படிகளை திருத்துவதற்காக எட்டாவது ஊதியக் குழுவை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

DA Hike; Rs 57,000 Increase in Lower Division Clerk Pay rag

டிஏ உயர்வு அறிவிப்புக்கு முன்னதாகவே அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. கீழ்நிலை எழுத்தரின் சம்பளம் ரூ.57 ஆயிரமாக இருக்கும். கீழ்நிலை எழுத்தரின் சம்பளம் ரூ.57 ஆயிரமாக இருந்தால், மற்றவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரங்கள் இதோ.


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களது சம்பளம் மற்றும் ஓய்வூதியம் எவ்வளவு உயரும் என்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

தேசிய கவுன்சில்-கூட்டு ஆலோசனை அமைப்பு (என்சி-ஜேசிஎம்) கமிஷனிடம் முன்மொழியப்பட்ட TORஐ சமர்ப்பித்துள்ளது. NC-JCM 2.86 ஃபிட்மென்ட் பேக்டரைக் கோருகிறது.

இத்தகைய சூழ்நிலையில், அரசு 2.86 பிட்மென்ட் பேக்டரை ஏற்றுக்கொண்டால், ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய உயர்வு ஏற்படும். இந்த ஃபிட்மென்ட் பேக்டர் செயல்படுத்தப்பட்ட பிறகு, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.8,000ல் இருந்து ரூ.51,480 ஆக உயரும். 

புதிய ஊதியக் குழுவில் 2.86 ஃபிட்மென்ட் பேக்டர் பயன்படுத்தப்பட்டால், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000ல் இருந்து ரூ.25,740 வரை அதிகரிக்கலாம்.

எட்டாவது ஊதியக் குழுவில் சம்பள உயர்வுக்கு 2.86 ஃபிட்மென்ட் பேக்டர் பயன்படுத்தப்பட்டால், லெவல்-2ல் வரும் கீழ் பிரிவு எழுத்தர் (LDC), நிர்வாக எழுத்தர் மற்றும் வழக்கமான நிர்வாகப் பணிகளின் சம்பளம் மாதம் சுமார் ரூ.57,000 ஆக இருக்கும்.

தற்போது, லெவல்-2 மத்திய அரசு ஊழியர்கள் ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் மாதம் ரூ.19,900 சம்பளம் பெறுகின்றனர். இதனால், எட்டாவது ஊதியக் குழுவின் ஊழியர்களின் சம்பளம் ரூ.37,000 அதிகரிக்கும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் எட்டாவது ஊதியக் குழுவை அமைக்க அரசு அறிவித்தது. இது 2026 ஜனவரியில் இருந்து செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கு முன், ஏழாவது ஊதியக் குழு 2014ல் அமைக்கப்பட்டது மற்றும் 2016ல் அமல்படுத்தப்பட்டது.

பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. இதுதான் லிமிட்.. வீட்டுக்கே வரி நோட்டீஸ் வரும்!

Latest Videos

vuukle one pixel image
click me!