அகவிலைப்படி 60% ஆக உயர்வு.! ரயில்வே ஊழியர்கள், பென்ஷனர்களுக்கு குட் நியூஸ்.!

Published : May 13, 2026, 09:44 AM IST

பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய முடிவால் லட்சக்கணக்கான குடும்பங்களின் மாத வருமானம் அதிகரிக்க உள்ளது. 

PREV
15
ரயில்வே ஊழியர்களுக்கு கூடும் சம்பளம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தொடர்ந்து பணவீக்க நிவாரணம் வழங்கும் வகையில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் நிலையில், தற்போது இந்திய ரயில்வே ஊழியர்கள் மற்றும் பென்ஷனர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. 7வது ஊதியக் குழுவின் கீழ் பணியாற்றும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

25
அகவிலைப்படி 60% ஆக உயர்வு

இதுவரை 58 சதவீதமாக வழங்கப்பட்ட அகவிலைப்படி, தற்போது 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த புதிய உயர்வு, பணியில் உள்ள ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். மத்திய அமைச்சரவை சமீபத்தில் இந்த உயர்வுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது ரயில்வே துறையிலும் அது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

35
டிஏ மற்றும் டிஆர் உயர்வு

இந்த டிஏ மற்றும் டிஆர் உயர்வு 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி முதல் இதுவரை கிடைக்க வேண்டிய கூடுதல் தொகையும் நிலுவைத் தொகையாக (பாக்கி) ஊழியர்கள் மற்றும் பென்ஷனர்களுக்கு வழங்கப்படும். மே மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துடன் இந்த உயர்வு சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலரின் மாதாந்திர வருமானத்தில் கனிசமான உயர்வு ஏற்படும்.

45
ரயில்வே ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

அரசு விதிமுறைகளின்படி அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றம் செய்யப்படுகிறது. ஒன்று ஜனவரி 1ஆம் தேதி முதல், மற்றொன்று ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாகும். நாடு முழுவதும் நிலவும் பணவீக்க நிலையை கணக்கில் கொண்டு, அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் (AICPI) அடிப்படையில் இந்த உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது.

55
பணவீக்கத்தில் நிம்மதி

இந்திய ரயில்வே நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அமைப்புகளில் ஒன்றாக இருப்பதால், லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நிதி நிம்மதி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வரும் இந்த சூழலில், கூடுதல் டிஏ உயர்வு மாதாந்திர செலவுகளை சமாளிக்க உதவும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories