இதில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.84.50 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வணிக சிலிண்டர் ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்து வருவதால் ஹோட்டல் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.