ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் EMI செலுத்தியும், கடன் வாங்கும்போது உங்கள் CIBIL ஸ்கோர் குறைந்திருக்கிறதா? இதற்கு EMI தவிர, நாம் அறியாமலேயே செய்யும் பல காரணங்கள் உள்ளன.
ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடன் விண்ணப்பிப்பது CIBIL ஸ்கோரை பாதிக்கலாம். ஒவ்வொரு வங்கியும் உங்கள் கடன் அறிக்கையை சரிபார்க்கும்போது ‘Hard Inquiry’ பதிவாகும். குறுகிய காலத்தில் அதிகமான Hard Inquiry இருந்தால், நீங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதாக கடன் வழங்குநர்கள் கருதலாம். இதனால் CIBIL ஸ்கோர் குறைய வாய்ப்புள்ளது.
பழைய, பயன்படுத்தாத கிரெடிட் கார்டை உடனடியாக மூடுவது சில நேரங்களில் CIBIL ஸ்கோரை பாதிக்கலாம். கார்டை மூடுவதால் உங்கள் மொத்த கிரெடிட் வரம்பு குறையலாம். இதனால் பயன்படுத்தும் கிரெடிட் விகிதம் அதிகரித்து, ஸ்கோர் குறைய வாய்ப்புள்ளது. மேலும், பழைய கணக்கை மூடுவது உங்கள் கிரெடிட் வரலாற்றின் நீளத்தையும் பாதிக்கக்கூடும்.
35
உங்கள் CIBIL அறிக்கையில் மறைந்திருக்கும் தவறுகள்!
உங்கள் தவறு இல்லாமலேயே CIBIL அறிக்கையில் தவறான தகவல்கள் இடம்பெறலாம். குறிப்பாக, வேறு ஒருவரின் கடன் உங்கள் பெயரில் பதிவாகியிருப்பது, தவறான நிலுவைத் தொகை அல்லது தவறான தவணைத் தாமதம் போன்றவை உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம். எனவே, CIBIL அறிக்கையை அவ்வப்போது சரிபார்த்து, தவறுகள் இருந்தால் உடனடியாக திருத்தம் கோருவது அவசியம்.
ஆண்டுக்கு இரண்டு முறையாவது CIBIL அறிக்கையை சரிபார்ப்பது ஏன் அவசியம்?
உங்கள் CIBIL அறிக்கையை ஆண்டுக்கு குறைந்தது இரண்டு முறையாவது சரிபார்ப்பது நல்ல பழக்கமாகும். இதன் மூலம் உங்கள் பெயரில் உள்ள கடன்கள், கிரெடிட் கார்டுகள், EMI செலுத்திய விவரங்கள் மற்றும் நிலுவைத் தொகைகள் சரியாகப் பதிவாகியுள்ளனவா என்பதை அறிந்துகொள்ளலாம். தவறான கடன் பதிவு, செலுத்திய EMI தாமதமாகக் காட்டப்படுவது அல்லது உங்களுக்குத் தொடர்பில்லாத கணக்கு இடம்பெறுவது போன்ற பிழைகளை முன்கூட்டியே கண்டறிய முடியும். இத்தகைய தவறுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் கிரெடிட் பீரோவிடம் புகார் அளித்து திருத்தம் கோரலாம். தொடர்ந்து அறிக்கையை கண்காணிப்பது உங்கள் CIBIL ஸ்கோரைப் பாதுகாக்க உதவும்.
55
நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.