அரசு ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு.. பண்டிகைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

Published : Sep 03, 2025, 09:42 AM IST

சமீபத்திய AICPI குறியீட்டு தரவின் அடிப்படையில், மத்திய பணியாளர்களின் DA 55% இலிருந்து 58% ஆக உயர்கிறது. மத்திய அரசு பணியாளர்களும், ஓய்வூதியர்களும் ஒவ்வொரு திருவிழா காலத்திலும் எதிர்பார்க்கும் செய்தி இதுதான்.

PREV
15
பண்டிகை பரிசு

அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான டியர்னஸ் அலவன்ஸ் (DA) உயர்வு குறித்த நீண்டநாள் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. சமீபத்திய AICPI குறியீட்டு தரவின் அடிப்படையில், மத்திய பணியாளர்களின் DA 55% இலிருந்து 58% ஆக உயர்கிறது. இந்த உயர்வு ஜூலை 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும்.

25
மத்திய அரசுப் பணியாளர்கள்

இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணியாளர்களும் ஓய்வூதியர்களும் ஒவ்வொரு திருவிழா காலத்திலும் எதிர்பார்க்கும் செய்தி இதுதான் "டிஏ உயர்ந்ததா?" என்கிற கேள்வி. குழந்தைகளின் கல்வி செலவு, வீட்டு பட்ஜெட், எதிர்கால திட்டமிடல் என, DA உயர்வு அவர்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்போது, ​​வரவிருக்கும் பண்டிகை காலத்தில் அவர்களுக்கு நிம்மதியான சுவாசத்தை அளிக்கும் வகையில் 3% உயர்வு உறுதியாகியுள்ளது.

35
7வது ஊதியக் கமிஷன்

அரசாங்க வட்டாரங்களின் தகவலின்படி, இந்த 3% உயர்வு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அக்டோபரில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் வெளியிடப்படும். ஆனால், இந்த உயர்வு ஜூலை 1 முதல் அமலில் வரும் என்பதால், பணியாளர்கள் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் (மற்றும் அறிவிப்பு தாமதமானால் அக்டோபர்) அரியர்கள் தொகையையும் ஒரே தடவையில் பெறுவார்கள்.

45
டியர்னஸ் அலவன்ஸ்

இந்த உயர்வின் கணக்கு எப்படி வந்தது? AICPI குறியீட்டு எண்கள் ஜனவரி முதல் ஜூன் 2025 வரை படிப்படியாக உயர்ந்தன. ஜூன் 2025ல் குறியீடு 145.0 ஆக உயர்ந்ததால், மொத்த டியர்னஸ் அலவன்ஸ் (DA) 58.18% ஆனது. விதிமுறைகளின்படி, தசம எண்கள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அதனால், டியர்னஸ் அலவன்ஸ் 58% ஆக நிர்ணயிக்கப்பட்டது. உதாரணமாக, ரூ.18,000 அடிப்படை ஊதியம் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.540 கூடுதல் வருவாய், வருடத்திற்கு ரூ.6,480 உயர்வு கிடைக்கும்.

55
ஓய்வூதியர் நன்மை

Level-1ல் ரூ.56,900 அடிப்படை ஊதியம் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1,707 மற்றும் வருடத்திற்கு ரூ.20,484 அதிகரிக்கும். மொத்தத்தில், இந்த 3% DA உயர்வு ஒரு எண்மட்டும் அல்ல. கோடிக்கணக்கான குடும்பங்களின் நிதிச்சுமையை குறைக்கும் நம்பிக்கை. உயர்ந்துவரும் பொருளாதாரச் சுமையில் இந்த அறிவிப்பு அக்டோபரில் வெளிவந்தவுடன், பண்டிகை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories