விண்ட்ஃபால் வரி ரத்து: வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ் - எவ்வளவு விலை குறையும்?

First Published | Dec 6, 2024, 9:11 AM IST

கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி மீதான விண்ட்ஃபால் வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ONGC, Oil India போன்ற பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்.

Govt Scraps Windfall Tax

உள்நாட்டில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஏற்றுமதியின் மீதான விண்ட்ஃபால் வரியை ரத்து செய்து மத்திய அரசு குறிப்பிடத்தக்க கொள்கை முடிவை எடுத்துள்ளது. பல மாத கால விவாதங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த முடிவு ONGC, Oil India, Nayara Energy மற்றும் Reliance Industries போன்ற பெரிய உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Windfall Tax

ஏனெனில் இது அவர்களின் வரிச்சுமையை கணிசமாகக் குறைக்கிறது. அதன் மூலம் அவர்களின் லாப வரம்புகளை அதிகரிக்கும் என்றே சொல்லலாம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதால், விண்ட்ஃபால் வரியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிவிப்பின் மூலம் இந்த முடிவை அறிவித்தார்.

Tap to resize

Petrol Diesel Export

ரஷ்யா-உக்ரைன் மோதலால் ஏற்பட்ட கச்சா விலையில் உயர்வின் போது எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டிய அதிகப்படியான லாபத்தை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையாக, ஜூலை 1, 2022 அன்று விண்ட்ஃபால் வரி முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில், நிறுவனங்கள் அதிக அளவு கச்சா மற்றும் பெட்ரோலிய பொருட்களை அதிக சர்வதேச விலையில் ஏற்றுமதி செய்தன. இது அசாதாரண லாபங்களுக்கு வழிவகுத்தது. விண்ட்ஃபால் வரியானது, அத்தகைய ஏற்றுமதியின் மீது வரிகளை விதிப்பதன் மூலம் இந்த இலாபங்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. ஆரம்பத்தில், அரசாங்கம் விண்ட்ஃபால் வரியை பின்வருமாறு விதித்தது.

Windfall Tax On Crude Oil

அவை  பெட்ரோல் ஏற்றுமதியில் லிட்டருக்கு ₹6 ஆகும். ATF ஏற்றுமதியில் லிட்டருக்கு ₹13 ஆகும். கச்சா எண்ணெயில் ஒரு டன் ₹23,250 ஆகும். அரசாங்கம் அதன் முதல் ஆண்டில் வரி மூலம் ₹25,000 கோடி ஈட்டியது. அதைத் தொடர்ந்து 2023-24 நிதியாண்டில் ₹13,000 கோடி. நடப்பு நிதியாண்டில் இதுவரை, தோராயமாக ₹6,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2023ல் ஒரு பீப்பாய்க்கு $90 ஆக இருந்த உலகளாவிய கச்சா எண்ணெய் விலை, செப்டம்பர் மாதத்திற்குள் $73.69 ஆகக் குறைந்தது.

Windfall Gains Tax

இந்த முடிவு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நேரடியாக குறைக்காது என்றாலும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைப்பு எதிர்காலத்தில் உள்நாட்டு விலைகளை பாதிக்கலாம். இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமான காலமாக நிலையானது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரசாங்கம் விலையை லிட்டருக்கு ₹2 குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.48க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மாநிலத்தில் தங்கம் கம்மி விலையில் கிடைக்குது.. எந்த மாநிலம் தெரியுமா?

Latest Videos

click me!