மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு மே மாதம் வழங்கப்பட உள்ளதாக தகவல். மே மாத மூன்றாவது வாரத்தில் அகவிலைப்படி மற்றும் போனஸ் சேர்த்து கணிசமான தொகை ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central government staff) மகிழ்ச்சியான செய்தி. கணிசமான தொகை விரைவில் கணக்கில் வரவு வைக்கப்படும். சந்தை விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) உயர்த்தப்படுகிறது. அதன்படி மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
26
DA Hike May 2025
அகவிலைப்படி உயர்வு எப்போது?
மோடி அரசு (Modi Government) 4% அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளதாக தகவல். அகவிலைப்படி மற்றும் நிலுவைத் தொகையுடன் சேர்த்து 10,000 முதல் 18,000 ரூபாய் வரை ஊழியர்களுக்கு கூடுதலாக கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பி, சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் (Group B, Group C, Group D employees) விரைவில் பயனடைவார்கள். எப்போது பணம் வரவு வைக்கப்படும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
36
Central Government Employee
அகவிலைப்படி மற்றும் போனஸ்
மே (May) மாத மூன்றாவது வாரத்தில் அகவிலைப்படி மற்றும் போனஸ் சேர்த்து கணிசமான தொகை அரசு ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படலாம் என தகவல். 50 லட்சம் அரசு ஊழியர்கள் (Employees) மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் (Pension Holder) விரைவில் பயனடைவார்கள்.
அனைத்து மத்திய அரசு ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள், மத்திய மற்றும் நவோதயா பள்ளி ஆசிரியர்கள், பாதுகாப்புத் துறை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பயனடைவார்கள். ஏழாவது ஊதியக் குழுவின் (Seventh Pay Commission) கீழ் 4% அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக தகவல். இதன் மூலம் மாதம் 720 முதல் 3152 ரூபாய் வரை ஊழியர்களுக்கு கூடுதலாக கிடைக்கும்.
56
Govt staff salary hike
போனஸ் எவ்வளவு கிடைக்கும்?
இந்திய ரயில்வேயின் (Rail) சி பிரிவு ஊழியர்களுக்கு 7,000 ரூபாய் போனஸ் வழங்கப்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை ஊழியர்களுக்கு 6800 முதல் 7000 ரூபாய் வரை போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல் ஆசிரியர்களுக்கும் 7,000 ரூபாய் போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.
66
Dearness Allowance update
அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் போனஸ்
தபால் துறை ஊழியர்களுக்கு 6900 முதல் 7100 ரூபாய் வரை போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. அமைச்சக ஊழியர்களுக்கு 6500 முதல் 7000 ரூபாய் வரை போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central government staff) இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. விரைவில் அவர்கள் பயனடைவார்கள். இந்த மாதமே கணிசமான தொகை அவர்களுக்கு கிடைக்கும்.