மத்திய அரசு சமீபத்தில் 2% சதவீதம் DA உயர்வு செய்துள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களின் DA 53% இருந்து 55% ஆக உயர்ந்துள்ளது.
27
பயனடைவோரின் எண்ணிக்கை
மத்திய அரசின் இந்த முடிவால் நாட்டின் 65 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.
37
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு
DA உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் உயரும். ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் 19000 ரூபாய் என்றால், 2% DA உயர்வால் மாதம் 380 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.
47
ஓய்வுபெற்றவர்களின் ஓய்வூதிய உயர்வு
ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் அடிப்படை ஓய்வூதியம் 8000 ரூபாய் என்றால், மாதம் 160 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.
57
எட்டாவது ஊதியக் கமிஷன்
மத்திய அரசு ஜனவரி மாதத்தில் எட்டாவது ஊதியக் கமிஷனை பரிந்துரை செய்துள்ளது. எட்டாவது ஊதியக் கமிஷன் 2026 ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்று பலர் நினைக்கிறார்கள்.
67
மத்திய அரசு தகவல்
மத்திய அரசு வட்டாரங்களின் தகவல் படி எட்டாவது ஊதியக் கமிஷன் 2027 முதல் அமலுக்கு வரும். 2026-ல் அறிக்கை சமர்ப்பிக்கும்.
77
அதிகரிக்கும் சம்பளம்
எட்டாவது ஊதியக் கமிஷன் அமலுக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 51 ஆயிரம் அல்லது அதற்கு மேல் இருக்கலாம்.