நவராத்திரியில் வாங்க வேண்டிய பங்குகள்.. தசரா வரை லாபம் உறுதி.. நோட் பண்ணுங்க.!

Published : Sep 24, 2025, 10:46 AM IST

இந்த நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களால் பங்குச் சந்தையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதனைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

PREV
14
முதலீட்டுக்கு சிறந்த பங்குகள்

இந்த ஆண்டு நவராத்திரியை முன்னிட்டு பங்கு சந்தையில் பலரும் முதலீடு செய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. காரணம், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் ஆகும். இதை ஒரு புதிய முதலீட்டு காலத்தின் துவக்கமாக நிபுணர்கள் பார்க்கின்றனர். இந்த சூழலில், நவராத்திரி போன்ற சுபநாளில் சரியான பங்குகளை தேர்வு செய்தால் முதலீட்டு போர்ட்ஃபோலியோ வலுப்படும் என அவர்கள் கருதுகின்றனர்.

24
லாபம் தரும் பங்கு

Geojit Investments-இன் கவுரவ் ஷா, Tata Consumer Products-ஐ ஒரு வருட இலக்கு விலை ரூ.1,300 என மதிப்பிட்டு பரிந்துரைத்துள்ளார். நல்ல மழைப்பொழிவு காரணமாக ஊரக, நகரப் பகுதிகளில் வருமானம் உயரும் என அவர் கருதுகிறார். மேலும் Ramco Cement (ரூ.1,275 இலக்கு விலை) மற்றும் PB Fintech (ரூ.2,200 இலக்கு விலை) ஆகியவற்றிலும் முதலீடு செய்யலாம் என கூறியுள்ளார்.

34
நிபுணர்கள் பரிந்துரை

சோலா செக்யூரிட்டிஸ்-இன் தர்மேஷ் காந்த், டாடா டெக், என்டிபிசி கிரீன் எனர்ஜி மற்றும் பெடரல் வங்கி ஆகியவற்றைப் பரிந்துரைத்துள்ளனர். Tata Tech, NTPC Green Energy ஆகியவை அடுத்த ஒரு வருடத்தில் 15-20% லாபம் தரக்கூடும் என்று கூறுகிறார். Federal Bank-லும் முதலீடு செய்ய பரிந்துரைக்கிறார்.

44
நவராத்திரி பங்கு

Marketsmith India-வின் மயுரேஷ் ஜோஷி, Sarda Energy (24% லாபம்), Lemon Tree Hotels (20% லாபம்), Apollo Hospitals (21% லாபம்) ஆகியவற்றை தனது தேர்வாகக் கூறியுள்ளார். குறிப்பாக Lemon Tree Hotels தனது ஹோட்டல் வணிகத்தை வெளிநாடுகளிலும் விரிவாக்கி வருவதால் EBITDA விகிதம் மேம்படும் வாய்ப்பு அதிகம் என அவர் கருதுகிறார். இது முதலீட்டு ஆலோசனை அல்ல. முதலீட்டுக்கு முன் நிதி ஆலோசகரின் கருத்தைப் பெறுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories