
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க தொழிலதிபர்களில் ரத்தன் டாடா முக்கியமானவர். சமையலுக்கு பயன்படும் உப்பு, டீ தூள், கைக்கடிகாரம், தங்க நகை, இரும்பு, ஆடம்பர தாஜ் ஹோட்டல், தொலைதொடர்பு என பல்வேறு துறைகளில் டாடா நிறுவனம் கோலோச்சி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யமான டாடா குழுமம் நாட்டின் பொருளாதாரச் சூழலை வடிவமைத்துள்ளது. உலகின் முன்னணி பரோபகாரர்களில் ஒருவராக இருக்கும் ரத்தன் டாடாவின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1937-ம் ஆண்டு நாவல் டாடா - சுனு தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தான் ரத்தன் டாடா. தனது கல்லூரி மேல்படிப்பை ஹார்டுவேர்டு பல்கலைக்கழகத்தில் முடித்த அவர் ஐபிஎம் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். எனினும் சில ஆண்டுகளில் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பினார்.
1962 இல் தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் ஒரு சாதாரண தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1970களில் டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட. துணை நிறுவனமான நேஷனல் ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை வெற்றியடையச் செய்தார். பின்னர் பல பொறுப்புகளில் வகித்த அவர் 1991 ஆம் ஆண்டில் டாடா சன்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் டாடா இண்டஸ்ட்ரீஸ் பல முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டாண்மைகளை மேற்கொண்டது,
அவர் 1990 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராக இருந்தார். அவர் தலைவராக இருந்த காலத்தில், குழுமத்தின் வருவாய் கடுமையாக அதிகரித்து, 2011-12ல் $100 பில்லியனை எட்டியது. பின்னர் அவர் அக்டோபர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை தற்காலிக தலைவராக ஆனார். இந்தியாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதுகளான பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் அகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
ரத்தன் டாடா அறக்கட்டளை மற்றும் அதனுடன் இணைந்த அறக்கட்டளைகள் மற்றும் சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் அதனுடன் தொடர்புடைய அறக்கட்டளைகளின் தலைவராக உள்ளார். அவர் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்'ஸ் மேனேஜ்மென்ட் கவுன்சிலின் தலைவராகவும், கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அறங்காவலராகவும் உள்ளார்.
இந்தியாவின் சிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்த டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் வளர்ச்சியில் ரத்தன் டாடா முக்கிய பங்கு வகித்துள்ளார். ரத்தன் டாடா இப்போது இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வெற்றிகரமான தொழிலதிபர்களில் ஒருவர்.
ரத்தன் டாடாவின் சொத்து மதிப்பு இப்போது 3800 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.. இதில் பெரும்பகுதி டாடா சன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வருகிறது. டாடா குழுமம் உப்பு முதல் தகவல் தொழில்நுட்பம் வரையிலான தொழில்களில் விரிவடைந்து வருகிறது. டாடா குழுமம் 23.6 டிரில்லியன் சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது.
ரத்தன் டாடா தனது பரோபகாரத்திற்காக அறியப்படுகிறார். டாடா டிரஸ்ட் மூலம் அவர் பல ஆண்டுகளாக அவர் வழங்கி வருகிறார், அதில் அவர் தற்போது தலைவராக உள்ளார். குறைந்த விலை, எரிபொருள்-திறனுள்ள, நான்கு இருக்கைகள் கொண்ட டாடா நானோ காரை தயாரித்ததன் மூலம் நாட்டின் நடுத்தர வர்க்க மக்களை நனவாக்கினார் ரத்தன் டாடா.
ரத்தன் டாடாவிடம் பல சொத்துக்கள் உள்ளன, அவற்றில் ஒன்று மும்பையின் கொலாபாவில் உள்ள ஆடம்பரமான பங்களா.. சுமார் 13,350 சதுர அடி பரப்பளவில் மூன்று மாடி வீடு உள்ளது. ரத்தன் டாடாவின் இந்த ஆடம்பரமான வீட்டில் ஒரு தனியார் உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், ஊடக அறை மற்றும் அனைத்து வசதிகளும் உள்ளன.
மேலும் கார் சேகரிப்புக்காகவும் பெயர் பெற்றவர் ரத்தன் டாடா. பேசிக மாடல் டாடா செடான்கள் முதல் மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஃபெராரி என பல ஆடம்பர கார் கலெக்ஷன்களை அவர் வைத்திருக்கிறார்.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக இருக்கும் ரத்தன் டாடா உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பின் தங்கி இருக்கிறார் தெரியுமா? இந்தியாவின் பெரும்பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது. ஆனால் ரத்தன் டாடாவின் சொத்து மதிப்பு ரூ.3800 கோடி தான்.
டாடா சன்ஸ் என்ற ஹோல்டிங் நிறுவனத்தின் கீழ், டாடா நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தில் 66 சதவீதம் டாடா அறக்கட்டளை நிறுவனங்கள் மூலம் பரோபகார நடவடிக்கைகளுக்காக வழங்கப்படுவதே இதற்குக் காரணம்.
தனது நேர்மை மற்றும் டாடா குழுமத்தின் மீது வலுவான அர்ப்பணிப்பு மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றால் மக்களை கவர்ந்து வருகிறார் ரத்தன் டாடா.. ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக மட்டுமல்லாமல், ரத்தன் டாடா தனது தொண்டு பணிகளுக்காகவும் அறியப்படுகிறார்.
பெரும் வெற்றி பெற்றாலும், ஊடகங்களில் இருந்து தன்னை ஒதுக்கி வைக்க முடிவு செய்த அவர், இன்றும் தொழில்துறையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், தனது அறிவு, அனுபவம், புரிதல் மற்றும் மென்மையான குணத்தால் நாடு முழுவதும் மதிக்கப்படும் உன்னத மனிதராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.