ரூ. 40,000 சம்பளம் என்றால், வீட்டு வாடகை உங்கள் சம்பளத்தில் 30% (ரூ. 12,000) மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உணவு, மளிகைப் பொருட்களுக்கு 15% (ரூ. 6,000) ஒதுக்க வேண்டும். போக்குவரத்து போன்ற செலவுகளுக்கு 10% (ரூ. 4,000) ஒதுக்க வேண்டும். மின்சாரம், வைஃபை, மொபைல், எரிவாயு, தண்ணீர் போன்றவற்றுக்கு 5% (ரூ. 2,000) ஒதுக்க வேண்டும். மருத்துவம், காப்பீட்டுக்கு 5% (ரூ. 2,000) ஒதுக்க வேண்டும்.