பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) கீழ் இதுவரை 39.82 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளது.
2024-25 ஆம் ஆண்டிற்கான 84.37 லட்சம் வீடுகள் என்ற இலக்கில், இதுவரை 39.82 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ஒப்புதல் அலிக்கப்பட்டுள்ளது என்று கிராமப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சந்திர சேகர் பெம்மாசானி அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். மேலும் அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய 18 மாநிலங்களில் 2024-25 ஆம் ஆண்டில் 84,37,139 வீடுகளைக் கட்ட அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.