வரி செலுத்தும் நடுத்தர குடும்பங்களுக்கு குட் நியூஸ்! ரூ.10 லட்சம் வரை வரி விலக்கு
இந்திய பட்ஜெட் 2025: மத்திய பட்ஜெட் 2025ல் அரசாங்கம் பெரிய அறிவிப்புகளை வெளியிடப் போகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி வருமான வரி நிவாரணத்தை அறிவிப்பார். புதிய வரி விதிப்பு முறையில் வரி செலுத்துவோர் கூடுதல் நிவாரணம் பெறலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டினால் அரசின் வரிவிலக்பை் பெற முடியும். ஆண்டு வருமானம் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 25 சதவீத வரி என்ற புதிய அடுக்கு அறிமுகப்படுத்தப்படும். பிசினஸ் ஸ்டாண்டர்ட், அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பட்ஜெட்டில் வரிவிலக்கு
10 லட்சம் வரை வருமானம் வரிவிலக்கு
கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பில் அரசு நிலையான விலக்கு தொகையை ரூ.75,000 ஆக உயர்த்தியது. இதன் காரணமாக ஆண்டு வருமானம் ரூ.7.75 லட்சம் வரை வருமான வரி செலுத்துவோர் இனி வரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால், ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்துக்கு மேல் உள்ள சம்பள வரி செலுத்துவோர் 30 சதவீத வரி செலுத்த வேண்டும். "நாங்கள் இரண்டு விருப்பங்களையும் பார்க்கிறோம். பட்ஜெட் அனுமதித்தால், நாங்கள் இரண்டு நடவடிக்கைகளையும் செயல்படுத்தலாம், ”என்று ஒரு அரசாங்க வட்டாரம் பிசினஸ் ஸ்டாண்டர்டுக்கு தெரிவித்தது.
அரசின் நிதிச்சுமை
ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி வரை அரசுக்கு இழப்பு
அவர் கூறுகையில், “ரூ.10 லட்சம் வரையிலான வருமான வரிக்கு வரிவிலக்கு அளிக்கலாம். மேலும், 15-20 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 25 சதவீத வரி என்ற புதிய ஸ்லாப் தொடங்கலாம். இதனால் அரசுக்கு ஆண்டு வருமானத்தில் ரூ.1,00,000 கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும் என்றும், இதற்கு அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். .
வரிவிலக்கு பெறும் நடுத்தர குடும்பங்கள்
நடுத்தர மக்களின் வரியை குறைக்க ஆலோசனை
நுகர்வு அதிகரிக்க, நடுத்தர மக்களுக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். வரிச்சுமை குறைவதால், மக்கள் கையில் அதிக பணம் இருக்கும், அதன் காரணமாக அவர்கள் அதிக செலவு செய்ய முடியும். பணவீக்கம், குறிப்பாக உணவுப் பொருட்களின் விலையேற்றம், மக்களின் சிரமங்களை அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் குறைவாக செலவு செய்கின்றனர். இதனால் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், பொருளாதாரம் மந்த நிலைக்குச் செல்லலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிகரிக்கும் பணப்புழக்கம்
வரியைக் குறைப்பதன் மூலம் நுகர்வு அதிகரிக்கலாம்
பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்வதைத் தடுக்க நுகர்வு அதிகரிக்க வேண்டும். நடுத்தர மக்கள் மீதான வரிச்சுமையை அரசு குறைத்தால், நுகர்வு அதிகரிக்கலாம் என வரித்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது பழைய வருமான வரியில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. புதிய வருமான வரி விதிப்பில், ஆண்டுக்கு 15 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.