எண்ணி 777 நாளில் கைமேல் பலன்! அதிக வட்டியுடன் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம்!

Published : Jan 29, 2025, 09:56 PM ISTUpdated : Jan 29, 2025, 11:28 PM IST

Central Bank 777 days special FD scheme: உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருக்கிறார்களா? அவர்கள் தங்கள் பணத்தை எங்காவது முதலீடு செய்ய விரும்பினால், சென்ட்ரல் வங்கியின் சிறப்பு திட்டம் சிறந்த வாய்ப்பாக உள்ளது. 777 நாள் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் (Fixed Deposit) திட்டத்தில் 8.05% வட்டி கிடைக்கும்.

PREV
15
எண்ணி 777 நாளில் கைமேல் பலன்! அதிக வட்டியுடன் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம்!
Central Bank 777 days special FD scheme

முதலீட்டைப் பொறுத்தவரை, மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகையை அதிகம் நம்புகிறார்கள். இந்தத் திட்டத்தில், அவர்கள் பணத்தை இழக்கும் அபாயம் இல்லை. உத்தரவாதமான வருமானத்தையும் பெறுகிறார்கள். உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்கள் தங்கள் பணத்தை சென்ட்ரல் வங்கியில் 777 நாள் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதில் மூத்த குடிமக்களுக்கு 8.05% வட்டி கிடைக்கும்.

25
Central Bank 777 days special FD scheme

இந்தத் திட்டத்தின் பெயர் சென்ட் கரிமா டைம் டெபாசிட் திட்டம் (Cent Garima Term Deposit Scheme). இந்தத் திட்டம் 777 நாட்கள் முதிர்வு காலம் கொண்டது. அதாவது இரண்டு வருடங்கள் மற்றும் ஒன்றரை மாதங்களில் இத்திட்டம் முதிர்வடையும். இதில், பொது வாடிக்கையாளர்களுக்கு 7.55% வட்டி வழங்கப்படுகிறது. அதே சமயம் மூத்த குடிமக்களுக்கு 0.5% கூடுதல் வட்டி கிடைக்கிறது. அதாவது முதியவர்களுக்கு 8.05% வட்டி வழங்கப்படுகிறது. முதியவர்கள் 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

35
Central Bank 777 days special FD scheme

மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் ரூ.1,00,000 டெபாசிட் செய்தால், 8.05% வட்டி விகிதத்தில், அவர்களுக்கு 18,490 ரூபாய் வட்டி கிடைக்கும். இதன் மூலம், முதிர்வு காலத்தில் 1,18,490 ரூபாய் கிடைக்கும். மற்ற வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,00,000 டெபாசிட்டுக்கு 7.55% வட்டி விகிதம் அடிப்படையில் 17,260 ரூபாய் வட்டி கிடைக்கும். இந்த வழியில், முதிர்வு தொகை 1,17,260 ரூபாயாக இருக்கும்.

45
Central Bank 777 days special FD scheme

சென்ட்ரல் வங்கியின் இந்த சிறப்பு FD திட்டத்தில் கடன் வசதியையும் பெறுலாம். உங்கள் டெபாசிட் தொகையில் 90 சதவீதம் வரை கடனாகப் பெறலாம். கடன் தொகைக்கான வட்டி விகிதம் டெபாசிட் செய்த தொகைக்குக் கிடைக்கும் வட்டியை விட 1.00% அதிகமாக இருக்கும். டெபாசிட் தொகையில் கடன் வாங்கியிருந்தால், முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதி கிடைக்காது.

55
Central Bank 777 days special FD scheme

இந்தத் திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள விரும்பினால், ஆன்லைன்/நெட் பேங்கிங்/மொபைல் பேங்கிங் மூலம் அதைப் பெறலாம். வங்கிக் கிளைக்குச் சென்று ஆஃப்லைனிலும் கணக்கைத் திறக்கலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.10,00,00,000 வரை டெபாசிட் செய்யலாம். முதிர்வுக்கு முன் நீங்கள் தொகையை திரும்பப் பெற்றால், 1% வீதத்தில் அபராதம் செலுத்த வேண்டும்.

click me!

Recommended Stories