கட்டுமானப் பொருட்களான சிமெண்ட், செங்கல், கற்களின் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது. இதனால் வீடு கட்டும் செலவு குறையும். இந்த மாற்றம், சிறிய அளவில் வீடு கட்டும் பொதுமக்களுக்கு மிகுந்த நிவாரணமாக இருக்கும்.
கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களின் விலை, ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வீடு கட்ட விரும்பும் பொதுமக்களுக்கும், பெரிய அளவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்கின்ற நிறுவனங்களுக்கும் இந்த மாற்றம் நல்ல செய்தியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக சிமெண்டு, செங்கல், கற்கள் போன்ற அடிப்படைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியில் கணிசமான தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
25
செங்கல் ஜிஎஸ்டி 5%
முன்னதாக சிமெண்டுக்கு 28% ஜி.எஸ்.டி.வரி இருந்தது. தற்போது அது 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு பை சிமென்டின் விலையில் நிச்சயம் குறைவு ஏற்படும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். அதேபோல வீடு கட்ட அவசியமாகத் தேவைப்படும் செங்கலுக்கும் 12% இருந்த வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், சிறிய அளவில் வீடு கட்டும் பொதுமக்களுக்கு மிகுந்த நிவாரணமாக இருக்கும்.
35
மலிவு வீடு திட்டங்கள்
மேலும், மண் மற்றும் சுண்ணாம்பு கலவை கற்களுக்கு முன்பு 12% வரி இருந்தது. தற்போது அது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கிரானைட், மார்பிள் போன்ற கற்களுக்கும் இதேபோன்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. 12% இருந்த ஜி.எஸ்.டி. 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சமையலறை, ஹால், அலங்கார வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் கற்களின் விலையும் குறைய வாய்ப்பு உள்ளது.
ஆனால், டைல்ஸ், இரும்புக் கம்பிகள், சிமெண்டு கலந்த சில பொருட்கள் போன்றவற்றின் விலை எந்த மாற்றமும் இல்லை. இவை மீது முந்தையபடி ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெயிண்ட் மற்றும் டைல்ஸ் போன்ற பொருட்களுக்கு ஏற்கனவே 18% வரி இருந்தது. அந்த வரி குறையாமல் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
55
ஜிஎஸ்டி குறைப்பு
மொத்தத்தில், இந்த மாற்றங்கள் கட்டுமானச் செலவைக் குறைக்கும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். செங்கல், சிமெண்டு, கல் போன்ற அடிப்படைப் பொருட்களில் கிடைத்த தள்ளுபடிகள், வீடு கட்டத் திட்டமிடும் குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும். அதே நேரத்தில், பெயிண்ட், டைல்ஸ் போன்ற அலங்காரப் பொருட்களில் எந்தக் குறைப்பும் வழங்கப்படாததால், அந்தப் பகுதியில் மக்கள் கூடுதல் செலவே! மேற்கொள்ள வேண்டியுள்ளது.