குஷியோ குஷி.! டிவி விலை 23 ஆயிரம் ரூபாய் குறையப்போகுது.! பொதுமக்களுக்கு குட் நியூஸ்

Published : Sep 05, 2025, 12:31 PM IST

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் உணவுப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. 

PREV
14
ஜிஎஸ்டி வரி - மக்கள் பாதிப்பு

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். வீட்டு உபயோக பொருட்கள் முதல் உணவு பொருட்கள் வரை பல மடங்கு வரி செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இதனால் சாதாரண மக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பாதிப்பு அடைந்தனர். எனவே ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. 

அந்த வகையில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த வகையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

24
ஜிஎஸ்டி வரியை குறைத்த மத்திய அரசு

இந்த கூட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 5 %, 12 %, 18 % மற்றும் 28 சதவீதம் ஆகிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகள் மாற்றப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியில் 12 சதவீதம், 28 சதவீதம் என்ற இரு வரிகள் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 5 சதவீதம், 18 சதவீத வரிகள் மட்டுமே இனி வரும் நாட்களில் நடைமுறையில் தொடர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு பொருட்கள், கல்வி உபகரணங்களில் விலையானது பல மடங்கு குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

34
டிவி விலை குறையப்போகுது

மேலும் ஏசி, டிவி , வாஷிங் மெஷின், மொபைல் போன்கள், கம்ப்யூட்டர்கள், சிமெண்ட், ஐஸ் கிரீம், ஜூஸ், பேக்கட் உணவு, பல ஜவுளி பொருட்களுக்கான வரியும் 18% வரியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 42 இன்ச் டிவி வலை 2ஆயிரம் ரூபாயும், 75 இன்ச் டிவிக்கு 23ஆயிரம் வரை குறைய இருப்பதாகபொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர், இதே போல வீட்டு கட்டமான பொருட்களின் விலையும் அதிரடியாக குறையவுள்ளது.

44
கட்டுமான பொருட்களின் விலையும்

சிமெண்ட்டுக்கு 28% இருந்த ஜி.எஸ்.டி வரி 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. செங்கலுக்கு 12% இருந்த ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மண் - சுண்ணாம்பு கலவை கற்களுக்கு 12% இருந்த ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கிரானைட், மார்பிள் போன்ற கற்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories