2025-26 நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை (ITR) தாக்கல் செய்யும் கடைசி தேதியை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது. e-filing போர்ட்டலில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025-26 நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்யும் கடைசி தேதியை நீட்டித்துள்ளது. இந்திய வரி வாரியம் (CBDT) வெளியிட்ட தகவலின்படி, தனிநபர்கள், இந்து பிரிவு குடும்பங்கள் (HUFs), கணக்கு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லாதவர்கள் அவர்களுக்கு இந்த நீட்டிப்பு பொருந்தும்.
25
வருமான வரித்துறை
மேலும், e-filing portal-ல் ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாக, பயனர்கள் சந்தித்த தொழில்நுட்ப பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டது கூறப்பட்டுள்ளது. வரித்துறை தெரிவித்ததாவது, இதுவரை ஏழு கோடிக்கும் அதிகமான ITR-கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும், இந்த கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது. வரியை இன்னும் தாக்கல் செய்யாதவர்கள் உடனே தாக்கல் செய்ய வேண்டும் என்று துறை வலியுறுத்தியுள்ளது.
35
வரி செலுத்துபவர்கள்
கடந்த ஆண்டு ஜூலை 31-க்குள் 7.28 கோடி ITR-கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் பல சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்கள் மற்றும் வரி செலுத்துபவர்கள் சமூக வலைதளங்களில், வரி கட்டணம் செலுத்துவதிலும், AIS (ஆண்டு தகவல் அறிக்கை) பதிவிறக்கம் செய்வதிலும் சிக்கல் இருப்பதாக புகார் அளித்திருந்தனர்.
மேலும், பலர் e-filing போர்ட்டலில் உள்நுழைய முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைகளை மனதில் கொண்டு, வரித்துறை ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இதனால் செப்டம்பர் 15-இல் இருந்து ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 16, 2025 (இன்று) என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, ஜூலை 31-இல் இருந்து செப்டம்பர் 15-வரை நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது.
55
வருமான வரி தாக்கல் அவகாசம்
வரித்துறையின் உதவி மையம் தொடர்ந்து செயல்படுவதாகவும், பயனர்கள் தொலைபேசி, லைவ் சாட், Webex செஷன் மற்றும் X (Twitter) வழியாக உதவி பெறலாம் கூறப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பரவி வந்த "ITR செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு" என்ற செய்தி போலியானது என்றும், சரியான தகவல்களை அறிய IncomeTax India-வின் அதிகாரப்பூர்வ ஹேண்டிலையே நம்ப வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.