டிமார்ட் பிரபலமடைந்ததற்குக் காரணம் ‘குறைந்த விலை, நல்ல தரம்’ ஆகும். காய்கறி, உணவுப் பொருட்கள், ஆடை, வீட்டு உபயோகப் பொருட்கள், சுத்தம் செய்யும் பொருட்கள், மின்சாதனங்கள் என ஒவ்வொரு பிரிவிலும் MRP-யை விட குறைவானது விலையில் பொருட்கள் கிடைக்கின்றன. மேலும், மெட்ரோ நகரங்களிலிருந்து சிறிய நகரங்கள் வரை தனது கடைகளை விரிவுபடுத்தியதால், டிமார்ட் இன்று எல்லோரையும் சென்றடைந்துள்ளது. தசரா, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் சிறப்பு சலுகைகள், தள்ளுபடிகள் வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர்.