5 ஆண்டுகளில் 7,388% லாபம்! ஐபிஎல் அணிகளை வளைத்துப் போட்ட நிறுவனம்!

எராயா லைஃப்ஸ்பேசஸ் பங்கு ஐபிஎல் அணிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தால் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எபிக்ஸ் டிராவல்ஸ் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கான தங்குமிட வசதிகளை செய்து தரவுள்ளது.

7,388 per cent return over the past five years

கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 7388 சதவீத வருமானத்தை ஈட்டிய ஒரு சிறிய மூலதனப் பங்கு மீண்டும் முதலீட்டாளர்ளின் கவனத்தை ஈர்த்துள்ளது. எராயா லைஃப்ஸ்பேசஸ் லிமிடெட், அதன் இந்திய துணை நிறுவனமான எபிக்ஸ் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட், 2025 ஐபிஎல் தொடரில் மூன்று முக்கிய அணிகளுக்கான பயணம் மற்றும் தங்குமிட வசதிகளை வழங்கும் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது.

ஐபிஎல் போட்டிகளின் போது தங்குமிடம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் எபிக்ஸ் டிராவல்ஸுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றன.

Eraaya Lifespaces Limited

தற்போது எபிக்ஸ் டிராவல்ஸ் பங்கு ரூ.65க்கும் குறைவான விலையில் உள்ளது. கடந்த ஆண்டில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 115 சதவீதம் உயர்ந்துள்ளது. இச்சூழலில் ஐபிஎல் அணிகளுடனான ஒப்பந்தம் காரணமாக புதிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுபற்றிக் கருத்து தெரிவித்த எபிக்ஸ் டிராவல்ஸின் நிர்வாக இயக்குனர் நவீன் குண்டு, இந்திய கிரிக்கெட்டின் சில முக்கிய வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக உள்ளது என்றார். உயர்தரமான போக்குவரத்து மற்றும் தங்குமிட சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதாகவும், அணிகள் தங்கள் செயல்திறனில் கவனம் செலுத்த அனுமதிப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.


Ebix Travels Private Limited

மற்றொரு மூலோபாய நடவடிக்கையாக, எராயா லைஃப்ஸ்பேசஸ் சமீபத்தில் அதன் துணை நிறுவனமான எபிக்ஸ் கேஷ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) உடன் மற்றொரு ஒப்பந்தம் செய்துள்ளது. 2025 ஐபிஎல் சீசனுக்கான அதிகாரப்பூர்வ பார்ட்னராக எபிக்ஸ் கேஷ் இணைந்துள்ளது.

இந்த ஒப்பபந்தம் மூலம் EbixCash-க்கு பிராண்டிங் வாய்ப்புகள், டிஜிட்டல் விளம்பரங்கள் மற்றும் ரசிகர்களைக் கவரும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்திய சந்தையில் நிறுவனத்தின் காலடியை வலுப்படுத்தும் எனவும் நம்பப்படுகிறது.

IPL 2025

விளையாட்டுத் துறைக்கு அப்பால், EbixCash ஒரு குறிப்பிடத்தக்க அரசாங்க ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளது. தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான ITI லிமிடெட், தனது தரவு மையம்-1 ஐ நிர்வகிப்பதற்காக தொழில்நுட்ப கூட்டாளியாக எபிக்ஸ் கேஷ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கான ஐந்து ஆண்டு ஒப்பந்தம் ரூ.100 கோடிக்கு மேல் மதிப்புடையது. இது நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவை மேலும் உயர்த்துகிறது.

Latest Videos

click me!