பாதுகாப்பற்ற கடனுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிரெடிட் கார்டு கடன் தொகையில் குறைந்தபட்சம் 25% இடர் மூலதனமாக ஒதுக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த எச்சரிக்கை நடவடிக்கை இருந்தபோதிலும், பல வங்கிகள் கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டுகளை வழங்குவதைத் தொடர்கின்றன. இருப்பினும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், குறிப்பாக கோடக் மஹிந்திரா, ஆர்பிஎல் மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற வங்கிகளில் கடன் திருப்பிச் செலுத்துவதில் குறைவு காணப்பட்டது.