இந்த வாரம் வங்கிகளுக்கு மொத்தம் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கிக்குச் செல்வோர், விடுமுறைப் பட்டியலை சரிபார்த்து பணிகளைத் திட்டமிடுவது அவசியம் ஆகும். அது எந்தெந்த தேதிகள் என்பதை இங்கு பார்க்கலாம்.
இந்த வாரம் வங்கிக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 4 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனவே முன்கூட்டியே பணிகளை திட்டமிடுவது அவசியம். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடும் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் இந்த விடுமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.
25
மகாராஷ்டிரா விடுமுறை
பிப்ரவரி 18 அன்று சிக்கிம் மாநிலத்தில் லோசார் திருவிழாவை முன்னிட்டு வங்கிகள் மூடப்படும். நாட்டின் மற்ற பகுதிகளில் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும். அதேபோல் பிப்ரவரி 19 அன்று மகாராஷ்டிராவில் சத்திரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி காரணமாக வங்கிகள் மூடப்படும்.
35
மிசோரம் வங்கி விடுமுறை
பிப்ரவரி 20 அன்று அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் மாநில நிறுவல் தினம் காரணமாக வங்கிகள் செயல்படாது. ஆனால் மற்ற மாநிலங்களில் வழக்கமான பணிகள் நடைபெறும்.
பிப்ரவரி 22 ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். இவ்வாறு மொத்தம் 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படுகின்றன.
55
மாநில வாரியாக வங்கி விடுமுறை
வங்கிக்கு செல்ல வேண்டியவர்கள் தங்களது மாநில விடுமுறை விவரங்களை முன்பே சரிபார்த்து திட்டமிடுவது நல்லது. ஆன்லைன் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என்பதால் அவற்றை பயன்படுத்தலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.