Bank transaction limit
பணப் பரிவர்த்தனை விதிகள்: இந்தியாவில் வருமான வரிச் சட்டத்தின் கீழ், பண பரிவர்த்தனைகள் தொடர்பான பல்வேறு விதிகள் மற்றும் வரம்புகள் உள்ளன. இந்த விதிகளைப் பின்பற்றுவது கட்டாயம். அதன் மூலம் உங்கள் பணத்தைப் பாதுகாப்பாகவும் வைத்திருக்க முடியும். வருமான வரித் துறையின் பார்வையில், பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான முறைகேடுகள் வரி ஏய்ப்பாகக் கருதப்படலாம். வரி மோசடி செய்தால் கடுமையான அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே இந்தத் தொகுப்பில் பண பரிவர்த்தனைகள் தொடர்பான முக்கியமான விதிகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
Bank transaction penalty
ஒரு நாளில் ரூ.2 லட்சம்: இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி, ஒரே நாளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாகப் பெற்றால், அது விதிகளுக்கு எதிரானது. ஒரு நபர் ஒரே நாளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை வெவ்வேறு வழிகளிலிருந்து பெற்றால், அது சட்டவிரோதமாகக் கருதப்படும். இதன் விளைவாக, வருமான வரித்துறை உங்களுக்கு அபராதம் விதிக்கலாம். பிரிவு 269ST இன் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கலாம்.
Cash transaction limit
வணிகத்திற்கான செலவு: நீங்கள் வணிகத்திற்காகச் செலவிடுகிறீர்கள் என்றால், 10,000 ரூபாய்க்கு மேல் பணத்தைச் செலவிட முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு சப்ளையருக்கு ரொக்கமாக ரூ.15,000 செலுத்தியிருந்தால், இந்தச் செலவு உங்கள் வரிக் கணக்கீடுகளில் சேர்க்கப்படாது. டிரான்ஸ்போர்ட்டர்களுக்கு இந்த வரம்பு ரூ.35,000 வரை இருக்கும். வணிகங்களில் அதிகப்படியான பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், வரி ஏய்ப்பு வழக்குகளைக் குறைக்கவும் இந்த வகையான செலவுகள் விதிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.
Lending money
கடன் வாங்குதல் / கொடுத்தல்: வருமான வரிச் சட்டத்தின்படி, 20,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக கடன் அல்லது டெபாசிட் வாங்கினால் அல்லது கொடுத்தால், அது விதிகளை மீறும் செயலாகும். அதாவது ஒருவரிடம் ரொக்கமாக ₹25,000 கடன் வாங்கினால் அது சட்டத்திற்கு எதிரானது. அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு 100% அபராதம் விதிக்கப்படலாம். 269எஸ்எஸ் மற்றும் 269டி நடவடிக்கை எடுக்கப்படலாம்.
Wedding expenses
திருமணம் மற்றும் பிற தனிப்பட்ட செலவுகள்: திருமணம் போன்ற தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் செலுத்துவதும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும். இந்த வரம்பைவிட அதிகமாக பணம் செலுத்தியிருந்தால், இரு தரப்பினரும் வருமான வரித்துறையின் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்.
PAN Card
பான் கார்டு கட்டாயம்: வங்கியில் ரூ.50,000 அல்லது அதற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்யும்போது, உங்கள் பான் எண்ணை வழங்குவது கட்டாயம். மேலும், ஒரு நிதியாண்டில் நீங்கள் டெபாசிட் செய்த மொத்தத் தொகை ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால், அது குறித்து வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.
Property
சொத்து வாங்குதல் / விற்பனை: ரூ.2 லட்சத்திற்கு மேல் சொத்து வாங்கினால் அல்லது விற்றால், அதற்கு ரொக்கம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் காசோலை, டிமாண்ட் டிராஃப்ட் அல்லது ஆன்லைன் பரிமாற்றம் போன்ற வங்கி சேனல்களைப் பயன்படுத்த வேண்டும்.
Income Tax Rules
எச்சரிக்கை தேவை: பண பரிவர்த்தனைகளில் வருமான வரித்துறை சிறப்பு கவனம் செலுத்துகிறது. நீங்கள் இந்த விதிகளைப் பின்பற்றவில்லை என்றால், வரி ஏய்ப்பு வழக்குகளில் அபராதம் செலுத்த வேண்டி வருவதுடன், சட்ட நடவடிக்கைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். இதைத் தவிர்க்க, எல்லாப் பரிவர்த்தனைகளையும் விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும். எல்லா பரிவர்த்தனைகளின் ஆவணங்களையும் முறையாகப் பராமரிக்க வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்தில் வருமான வரி தொடர்பான பிரச்சினைபகளைத் தவிர்க்கலாம்.