Banking Amendment Bill 2024
வங்கிச் சட்டத் திருத்த மசோதாவில் மொத்தம் 19 திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்தத் திருத்தங்கள் வங்கிகளின் செயல்பாட்டை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் கணக்கு வைத்திருப்பவர்களின் நலன்களையும் பாதுகாக்கும் என மத்திய அரசு கூறுகிறது.
Banking Amendment Bill 2024
வங்கிச் சட்ட திருத்த மசோதா 2024 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம், இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934, வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949, பாரத ஸ்டேட் வங்கி சட்டம் 1955 ஆகியவற்றில் மொத்தம் 19 திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, இப்போது செயல்பாட்டில் உள்ள வங்கிக் கணக்கில் ஒரே ஒரு நாமினிக்குப் பதிலாக 4 நாமினிகள் வரை சேர்க்க முடியும்.
Banking Amendment Bill 2024
ஈவுத்தொகை, பங்குகள், வட்டி மற்றும் 7 ஆண்டுகளாகக் கோரப்படாத முதிர்ச்சியடைந்த பத்திரங்கள் ஆகியவை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு (IEPF) மாற்றப்படலாம். இதன் மூலம், முதலீட்டாளர்கள் IEPF மூலம் தங்கள் பணத்தைக் கோர முடியும். வங்கி சட்ட திருத்த மசோதா 2024 இல் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் வங்கிகளின் செயல்பாட்டை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் நலன்களையும் பாதுகாக்கும்.
Banking Amendment Bill 2024
வங்கி சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, இப்போது கணக்கு வைத்திருப்பவருக்கு வங்கிக் கணக்கின் நாமினிக்கு பங்கை வழங்க இரண்டு ஆப்ஷன்கள் கிடைக்கும். ஒன்று, அவர் அனைத்து நாமினிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு பங்கைக் கொடுக்க முடியும். அல்லது நாமினிகளில் ஒருவர் பின் ஒருவராக பணம் பெறும் வகையில் நாமினிகளை ஒரு வரிசையில் நியமனம் செய்ய முடியும்.
Banking Amendment Bill 2024
உரிமை கோரப்படாத தொகை சரியான வாரிசுக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்காக இந்த மாற்றம் செய்யப்படுகிறது. மார்ச் 2024 நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள வங்கிக் கணக்குகளில் உரிமை கோரப்படாத பணம் சுமார் ரூ.78,000 கோடி உள்ளது.
Banking Amendment Bill 2024
வங்கி சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் மாநில கூட்டுறவு வங்கியிலும் பணிபுரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்களின் பதவிக்காலம் தற்போது 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படும். இருப்பினும், இந்த விதி தலைவர் மற்றும் முழுநேர இயக்குநர்களுக்குப் பொருந்தாது.
Banking Amendment Bill 2024
வங்கி சட்டத்திருத்த மசோதாவில், தணிக்கையாளர்களின் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை மற்றும் உயர்மட்ட திறமையாளர்களை பணியமர்த்தும் உரிமையை ஆகியவை அரசு வங்கிகளுக்குக் கிடைக்கும். இது வங்கியின் தணிக்கை தரத்தை மேம்படுத்தும்.
Banking Amendment Bill 2024
வங்கி திருத்த மசோதா 2024 இன் கீழ், ரிசர்வ் வங்கிக்கு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால வரம்பை மாற்றிக்கொள்ள வங்கிகளுக்கு அனுமதி கிடைக்கும். இப்போது இந்த அறிக்கையை 15 நாட்கள், ஒரு மாதம் மற்றும் காலாண்டு முடிவில் கொடுக்கலாம். முன்னதாக, வங்கிகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ரிசர்வ் வங்கியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.