RBI on Old 5-Rupee Coins
இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பழைய தடிமனான 5 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் இருந்து முழுமையாக விலக்க முடிவு செய்துள்ளன. இந்திய நாணயங்கள் மற்றும் நோட்டுகள் ஆர்பிஐ மூலம் வெளியிடப்படுகின்றன. அவற்றில் ஐந்து ரூபாய் நாணயம் மிகவும் வித்தியாசமானது.
Five rupee coins
முதலில் பழைய தடிமனான 5 ரூபாய் நாணயம் இருந்தது. பின்னர் தங்க நிறத்தில் மெல்லிய 5 ரூபாய் நாணயம் வந்தது. சமீப காலமாக பழைய தடிமனான 5 ரூபாய் நாணயங்களைக் காண முடிவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக பழைய 5 ரூபாய் நாணயங்கள் தயாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Old Coins
மீதமுள்ள நாணயங்கள் மட்டுமே சந்தையில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் இது ஏன் நடந்தது தெரியுமா? இதற்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும்? பழைய நாணயங்களுக்குப் பதிலாக புதிய நாணயங்கள் ஏன் தயாரிக்கப்பட்டன? இதற்குப் பின்னால் மிகப் பெரிய காரணம் உள்ளது.
New 5 rupee coin
எந்தவொரு நாணயத்திற்கும் அதன் உலோக மதிப்பு மற்றும் விலை என இரண்டு வகையான மதிப்பு உண்டு. நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள எண் அதன் விலை மதிப்பைக் குறிக்கிறது. உதாரணமாக, ஒரு நாணயத்தில் ஐந்து என்று எழுதப்பட்டு இருந்தால் அது அந்த நாணயத்தின் விலையைக் குறிக்கும்.
Coin collection
பழைய 5 ரூபாய் நாணயத்தை உருக்கியபோது, அதன் உலோக மதிப்பு விலை மதிப்பைவிட அதிகமாக இருந்தது. இதனால் அந்த நாணயத்தை உருக்கி பிளேடு தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் பழைய 5 ரூபாய் நாணயங்களைச் சிலர் தவறாக பயன்படுத்த ஆரம்பித்தனர். இதன் எதிரொலியாகவே அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் (ஆர்பிஐ) முக்கிய முடிவை எடுத்தன.
Coins
பழைய ஐந்து ரூபாய் நாணயங்கள் மிகவும் தடிமனாக இருப்பதை நீங்களும் கவனித்திருப்பீர்கள். எனவே அவற்றைத் தயாரிக்க நிறைய உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன. நாணயம் மற்றும் ஷேவிங் பிளேடு இரண்டும் ஒரே உலோகத்தால் செய்யப்பட்டவை. இந்த விஷயம் தெரிந்ததும் சிலர் அதை சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்தனர்.
Razor blades
இதனால், பழைய 5 ரூபாய் நாணயங்கள் தவறான வழிகளில் வங்கதேசத்திற்குக் கடத்தப்பட்டன. அங்கு இந்த நாணயங்கள் உருகப்பட்டு, அந்த உலோகத்திலிருந்து பிளேடுகள் செய்யப்பட்டன. ஒரு நாணயத்தை உருக்கி ஆறு பிளேடுகள் செய்ய முடிந்தது. ஒரு பிளேடு 2 ரூபாய் வீதம், 12 ரூபாய்க்கான பிளேடுகளை ஒரே ஒரு 5 ரூபாய் நாணயத்திலிருந்து தயாரிக்க முடியும். இதனால், கடத்திச் செல்லப்பட்ட 5 ரூபாய் நாணயங்களை பயன்படுத்தி அங்குள்ள மக்கள் மிகவும் பயனடைந்தனர்.
5 rupees
இதனால் சந்தையில் 5 ரூபாய் நாணயங்கள் குறைந்து வருவதை கவனித்த அரசாங்கம் புதிதாத 5 ரூபாய் நாணயங்களைக் கொண்டுவர நடவடிக்கையை எடுத்தது. அதன்படி, ரிசர்வ் வங்கி 5 ரூபாய் நாணயங்களை முன்பைவிட மெல்லியதாக மாற்றியது. மேலும், நாணயங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உலோகத்தையும் மாற்றியமைத்துள்ளது.