Tamilnadu Government
இந்தியாவில் உள்ள வங்கி விடுமுறைகளில் தேசிய விடுமுறைகள் மற்றும் மாநில அரசு விடுமுறைகள் அடங்கும். அரசு விடுமுறைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மாநில அரசு வங்கி விடுமுறைகள் மற்றும் மத்திய அரசு வங்கி விடுமுறைகள். மாநில அரசு வங்கி விடுமுறைகள் மாநிலங்களில் வேறுபடுகின்றன. அதே நேரத்தில் மத்திய அரசு வங்கி விடுமுறைகள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும். இவை தவிர, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறையாகும். இந்நிலையில், 2025ம் ஆண்டில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை பார்ப்போம்.
Bank Holidays in Tamilnadu 2025
வங்கி விடுமுறைகள்
ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு (புதன்), ஜனவரி 14 பொங்கல் (செவ்வாய்), ஜனவரி 15 திருவள்ளுவர் தினம்(புதன்), ஜனவரி 16 உழவர் திருநாள்(வியாழன்), ஜனவரி 26 குடியரசு தினம் (ஞாயிறு), பிப்ரவரி 3 வசந்த பஞ்சமி( திங்கள்), பிப்ரவர் 26 மகாசிவராத்திரி (புதன்), மார்ச் 14 ஹோலி (வெள்ளி), மார்ச் 29 புனித வெள்ளி(சனி), மார்ச் 30 தெலுங்கு வருடப் பிறப்பு (ஞாயிறு), மார்ச் 31 ரம்ஜான்(திங்கள்).
Bank Holidays News
ஏப்ரல் 09 தெலுங்கு புத்தாண்டு தினம் (புதன்), ஏப்ரல் 10 மகாவீர் ஜெயந்தி (வியாழன்), ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு/ டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் (திங்கள்), ஏப்ரல் 18 புனித வெள்ளி (வெள்ளி), மே 1 மே தினம் (வியாழன்), மே 12 புத்த பூர்ணிமா (திங்கள்).
Tamilnadu Bank Holidays
ஜூன் 7 பக்ரீத் (சனி), ஜூன் 17 ஈத் அல்-அதா (செவ்வாய்), ஜூலை 6 மொகரம் (ஞாயிறு), ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் (வெள்ளி), ஆகஸ்ட் 16 கிருஷ்ணர் ஜெயந்தி (சனி), ஆகஸ்ட் 27 விநாயகர் சதூர்த்தி (புதன்), செப்டம்பர் 05 மிலாதுன் நபி (வெள்ளி), அக்டோபர் 01 ஆயுத பூஜை (புதன்), அக்டோபர் 02 விஜயதசமி/ காந்தி ஜெயந்தி (வியாழன்), அக்டோபர் 20 தீபாவளி (திங்கள்), நவம்பர் 5 குருநாநக் ஜெயந்தி(புதன்), டிசம்பர் 25 கிருஸ்துமஸ் (வியாழன்) உள்ளிட்ட விடுமுறை அடங்கும்.