Car Loan: லோனில் கார் வாங்குபவர்களின் கவனத்திற்கு – மறந்தும் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்!

Published : Jul 03, 2025, 12:02 PM ISTUpdated : Jul 03, 2025, 12:05 PM IST

கார் லோன் முடிந்த பின்னரும் வங்கியின் NOC பெறாமல் இருந்தால், காரின் உரிமை முழுமையாக உங்களுக்கு இருக்காது. NOC பெறாமல் கார் விற்பனை செய்வதில் சிக்கல்கள் ஏற்படும். NOC பெற்று RTO-வில் Hypothecation நீக்குவது அவசியம்.

PREV
19
லோனில் கார் - இது தெரியாம போச்சே!

இன்று பெரும்பாலானோர் கார் வாங்குவதற்காக வங்கி கடன் (Car Loan) பெறுகிறார்கள். ஒரு கட்டமாகத் தவணை கட்டி, கார் எடுத்ததும் மகிழ்ச்சியில் மிதப்பார்கள். இனி கார் முழுமையும் நம்மதுதான் எனவும் அவர்கள் நினைப்பார்கள். ஆனால் உண்மையில் அப்போது காரின் உரிமை முழுமையாக உங்களுக்கே கிடைக்காது என்பதை பலர் புரிந்து கொள்ளவில்லை. இது பின்னாளில் பல்வேறு சட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

29
லோனில் கார் வாங்கும்போது என்ன நடக்கிறது?

நீங்கள் கார் ஷோரூமில் அட்வான்ஸ் தொகையை செலுத்துகிறீர்கள். மீதியுள்ள தொகையை வங்கி உங்கள் சார்பாக செலுத்துகிறது. அதன்படி, கார் உங்கள் பெயரில் ரெஜிஸ்டர் ஆகினாலும், வங்கியும் co-owner ஆகவே இருக்கும். இது RC (Registration Certificate) புத்தகத்தில் ‘Hypothecation to [Bank Name]’ என்ற வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

39
முக்கியமான தவறு: NOC எடுக்காமல் விட்டுவிடுவது

பலர் கடன் தவணை முடிந்ததும், வங்கியுடன் தங்களுடைய தொடர்பு முடிந்துவிட்டதாக எண்ணுகிறார்கள். ஆனால் உண்மையில், வங்கியின் NOC (No Objection Certificate) வாங்கப்படாதவரை, கார் மீதான உரிமை உங்களிடம் இல்லை எனவே, விற்க முடியாது.

49
தவணை முடிந்ததும் என்ன செய்ய வேண்டும்?
  • வங்கிக்கு நேரில் சென்று NOC கேட்கவும்
  • இது ஒரு அதிகாரப்பூர்வ கடிதம்
  • அதில் நீங்கள் ஒட்டுமொத்த கடனை செலுத்திவிட்டீர்கள் என்றும், வங்கிக்கு இனி எந்த உரிமையும் இல்லை என்றும் கூறப்படும்
  • Form 35 (Hypothecation Cancellation Form) – வங்கியிலிருந்து பெற்று நிரப்ப வேண்டும்
59
பின்வரும் ஆவணங்களை தயார்படுத்துங்கள்
  1. Original RC Book
  2. Insurance Copy
  3. Pollution Certificate
  4. Aadhaar, PAN Xerox
  5. NOC & Form 35
  6. Address Proof
  7. Passport size photo

இவற்றை உங்கள் மாவட்ட RTO அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.இனி வங்கி பெயர் நீக்கப்பட்ட புதிய RC கார்டு (Smart Card / Book) உங்களுக்கு வழங்கப்படும்.

69
ஏன் இது அவசியம்?
  • கார் விற்பனை செய்யும்போது வங்கியின் பெயர் இருந்தால், வாங்குபவர் தயங்குவார்கள்.
  • இன்ஷூரன்ஸ் கிளெயிம் செய்யும் போது Hypothecation நீக்கப்படாதிருந்தால், தொகை செலுத்ததில் சிக்கல் ஏற்படும்.
  • கார் 15 ஆண்டுகள் கடந்த பிறகு Fitness Certificate (FC) புதுப்பிக்க முடியாமல் தடையா வரும்.
  • சாலை போக்குவரத்து விதிகளை மீறிய வழக்குகளில் சொந்த உரிமை இல்லாததால் சட்டபூர்வ தடைகள் ஏற்படலாம்.
79
கார் விற்பனைக்கு முன் கண்டிப்பாக செய்ய வேண்டியது
  • RC Book-ல் வங்கி பெயர் இல்லாமலிருப்பதை உறுதிப்படுத்தவும்.
  • Hypothecation நீக்கப்படாத கார் வாங்குவதில் ஏமாற்றம் ஏற்படலாம்.
  • Used Car Portal-களிலும் இந்த விபரங்களை சரிபார்த்து பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
89
சிக்கல்களைத் தவிர்க்க ஆலோசனைகள்
  • லோனில் கார் வாங்கும் பொழுதே பூரண சாசனங்களை படிக்க வேண்டும்.
  • தவணை முடிந்ததும் தாமதிக்காமல் வங்கியிலிருந்து NOC வாங்கி பதிவு மாற்றம் செய்துவிட வேண்டும்.
  • வாகனம் உங்கள் சொத்தாக இருப்பதற்கான முழுமையான ஆவணங்களை வைத்திருப்பது உங்கள் பாதுகாப்பு
99
காரை விற்கும் முன் செய்ய வேண்டியது!

கடன் தவணை முடிந்து விட்டதென்று எண்ணி, “இனி என் காரை விற்கலாம்” என நினைக்கும் முன், நீங்கள் Hypothecation நீக்கியிருக்கிறீர்களா? RC புத்தகத்தில் வங்கியின் பெயர் இருக்கிறதா என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டீர்களா? இது போன்று சிறிய தவறுகள், உங்கள் சொத்து மேலான உரிமையை இழக்கச் செய்யும். அதனால் – வங்கியிலிருந்து NOC எடுத்து, RTO-வில் Hypothecation நீக்குவது கட்டாயம்! இது உங்கள் காரை முழுமையாக உங்கள் சொத்தாக்கும் ஒரே வழி.

Read more Photos on
click me!

Recommended Stories