பேங்க் எஃப்.டி-யா? மியூச்சுவல் ஃபண்டா? இந்தியர்கள் அதிகம் விரும்பும் டாப் 5 முதலீட்டு திட்டங்கள்!

Published : Nov 10, 2026, 03:04 PM IST

83% இந்தியர்கள் சேமிக்கும் பழக்கம் கொண்டவர்களாகவும், 65% பேர் 30 வயதிற்குள்ளேயே முதலீடு செய்யத் தொடங்குவதாகவும் தெரியவந்துள்ளது. 56% பெண்கள் சுயாதீனமாக நிதி முடிவுகளை எடுக்கின்றனர்.

PREV
14
பொதுவான சேமிப்புப் பழக்கம்

இன்றைய இளைஞர்கள் (Gen Z) பணத்தை வீண் செலவு செய்கிறார்கள் என்ற பொதுவானக் கருத்து நிலவி வரும் நிலையில், அவர்கள் மிகவும் பொறுப்பாகவே பணத்தைச் செலவிடுகிறார்கள் என்பதைச் சமீபத்திய ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. YouGov நடத்திய 'How India Saves 2026' கணக்கெடுப்பின்படி, Gen Z, Gen X மற்றும் பெண்கள் வரை அனைத்துத் தரப்பு இந்தியர்களின் சேமிப்பு மற்றும் முதலீட்டு பழக்கவழக்கங்கள் குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வின் படி, ஒவ்வொரு தலைமுறையினரின் நிதி திட்டமிடுதல் மற்றும் இலக்குகள் வெவ்வேறாக அமைந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வில் கலந்துகொண்ட 83% நபர்கள் சேமிப்பதையும் முதலீடு செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் 65% நபர்கள் தங்களின் 30 வயதிற்குள்ளாகவே சேமிக்கத் தொடங்கிவிடுகின்றனர். இளைஞர்கள் பெரும்பாலும் டிஜிட்டல் ஆப்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலமாகவே சேமிப்பை மேற்கொள்கின்றனர்.

24
நிதி சுதந்திரத்துடன் செயல்படும் பெண்கள்

56% பெண்கள் தங்களின் நிதி சார்ந்த முடிவுகளைத் தானாகவே சுயாதீனமாக எடுக்கின்றனர். 23% பெண்கள் தங்களின் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து நிதி முடிவுகளை மேற்கொள்கின்றனர். 46% பெண்கள் குடும்பத்தின் பணம் சார்ந்த விஷயங்களைத் தானாகவே கையாளுகின்றனர். ஒட்டுமொத்தமாக இந்த டிஜிட்டல் யுகத்தில் இந்தியப் பெண்கள் நிதி சுதந்திரத்தோடு செயல்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

34
இந்தியர்கள் அதிகம் முதலீடு செய்யும் திட்டங்கள்

இந்தியர்கள் தங்களின் பணத்தை பல்வேறு திட்டங்களில் பிரித்து முதலீடு செய்கின்றனர். மியூச்சுவல் ஃபண்டுகள் (Mutual Funds) - 23% வங்கி FD மற்றும் RD (பாதுகாப்பான முதலீடுகள்) - 21% தங்கம் (Gold) - 14%, ஈக்விட்டி பங்குகள் (Equity Shares) - 12%, இன்சூரன்ஸ் (Insurance) - 10%.

44
தலைமுறை வாரியான முதலீட்டு முன்னுரிமைகள்

Gen Z இளைஞர்கள் (18 முதல் 27 வயது வரை):

இன்றைய இளைஞர்களில் 26% நபர்கள் தங்களின் வருமானத்தில் பெரும் பகுதியை வீடு வாங்குவதற்காக முதலீடு செய்கின்றனர். எதிர்காலத்தில் வாடகைச் செலவுகளைக் குறைப்பதற்காக, தற்போதிருந்தே ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யத் தொடங்குகின்றனர்.

Gen X முதலீட்டாளர்கள் (40 வயதைக் கடந்தவர்கள்):

இவர்கள் தங்களின் சேமிப்பில் பெரும் பகுதியை ஓய்வூதிய நிதிக்காக (Retirement Fund) முதலீடு செய்கின்றனர். மேலும் ஓய்வுக்காலச் சேமிப்பு, மருத்துவச் செலவுகள், பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகள் ஆகியவையே இவர்களின் முதன்மை இலக்குகளாக உள்ளன.

இளைஞர்கள் 30 வயதிற்குள் சேமிக்கத் தொடங்குவது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அத்துடன் பெண்களின் நிதி சுதந்திரம் அதிகரித்திருப்பதும், மக்கள் தங்கள் வயதிற்கு ஏற்ப சரியான திட்டமிடலுடன் முதலீடு செய்து வருவதும் இந்திய பொருளாதாரத்திற்குப் பெரும் நன்மை பயக்கும் விஷயங்களாகக் கருதப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories