ஏப்ரல் 1க்கு பிறகு சம்பளதாரர்களுக்கு ஆப்பு.. இந்த 14 முடிவுகள் உங்களை பாதிக்கும்.. உஷார்

Published : Feb 02, 2026, 10:36 AM IST

பட்ஜெட் 2026ல் வருமான வரி ஸ்லாப்களில் மாற்றம் இல்லை என்றாலும், சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் நிதி வாழ்க்கையை பாதிக்கும் 14 முக்கிய முடிவுகளை அரசு அறிவித்துள்ளது.

PREV
15
சம்பளதாரர்களுக்கு பட்ஜெட் 2026 தருவது என்ன?

பட்ஜெட் 2026, சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ததா என்ற கேள்வி எழுந்தாலும், தினசரி வருமானம் மற்றும் செலவுகளை நேரடியாக பாதிக்கும் பல முக்கிய முடிவுகள் அரசு தெரிவித்துள்ளது. வருமான வரி ஸ்லாப்களில் மாற்றம் இல்லை என்றாலும், வரி செலுத்தும் முறையை எளிமைப்படுத்தும் நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. “வரி சுமை குறைந்ததா?” குறிப்பிடிலும், “வரி நடைமுறை சுலபமானதா?” என்பதே இந்த பட்ஜெட்டின் மையமாக உள்ளது. இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பாக, 2026 ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

25
நடுத்தர வர்க்க பட்ஜெட்

விதிமுறைகள், பொதுமக்களுக்கு புரியும் வகையிலான வரி படிவங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், குறைந்த வருமானம் கொண்ட வரி செலுத்துபவர்களுக்கு ‘Nil Deduction Certificate’ பெறும் நடைமுறை முழுவதும் தானியங்கியாக மாற்றப்படும். இனி அதிகாரியிடம் விண்ணப்பம் போட வேண்டிய அவசியம் இல்லாததால், சிறு வரி செலுத்துபவர்களுக்கு இது பெரிய நிம்மதியாக பார்க்கப்படுகிறது. மேலும், மோட்டார் விபத்து இழப்பீட்டுத் தொகைக்கு வட்டிக்கு இனி வருமான வரி கிடையாது, TDS-உம் பிடித்தம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணம், கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்கான TCS மற்றும் TDS விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

35
வருமான வரி மாற்றங்கள்

இதனால் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் மற்றும் சிகிச்சைக்காக செல்லும் குடும்பங்களுக்கு ஓரளவு செலவு குறையும். மனித வள சேவைகளுக்கான TDS விதிகள் தெளிவுபடுத்தப்பட்டு, குறைந்த விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரி தாக்கல் தொடர்பாக சில முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் கடைசி தேதி மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுகிறது. சிறிய கட்டணம் செலுத்தினால் கூடுதல் அவகாசம் கிடைக்கும். படிவம் 15G, 15H போன்ற படிவங்களை பல நிறுவனங்களில் முதலீடு வைத்திருப்பவர்கள் இனி டிபாசிடரி மூலம் ஒரே முறையில் சமர்ப்பிக்கலாம்.

45
புதிய வருமான வரி சட்டம்

அதே நேரத்தில், ITR தாக்கல் செய்யும் கடைசி தேதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனிநபர்கள் ஜூலை 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தை நேரடியாக தொடும் இன்னொரு முக்கிய அறிவிப்பு, வெளிநாட்டு சொத்து அறிவிப்பு திட்டம். ஒரு முறை மட்டும் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம், வரையறுக்கப்பட்ட அளவுக்குள் வெளிநாட்டு வருமானம் அல்லது சொத்துக்களை அறிவித்தால், வழக்கு மற்றும் அபராதங்களில் இருந்து விடுபட முடியும். இதேபோல், அபராதங்கள் மற்றும் வழக்குத் தொடரும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. சில தொழில்நுட்ப தவறுகளுக்கு இனி அபராதம் அல்ல, கட்டணம் மட்டுமே விதிக்கப்படும். ஷேர் பைபேக் தொடர்பான வரிகளும் மாற்றப்பட்டுள்ளன.

55
வரி விதி மாற்றம்

தனிப்பட்ட பயன்பாட்டுக்கான இறக்குமதி பொருட்களில் சுங்கவரி குறைக்கப்பட்டாலும், F&O வர்த்தகத்தில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தத்தில், பட்ஜெட் 2026 உடனடி வரி குறைப்பைத் தரவில்லை என்றாலும், வரி செலுத்தும் முறையை சுலபமாக்கி, அபராதப் பயத்தைக் குறைத்து, நடுத்தர வர்க்கத்தின் நிதி வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் முயற்சி. இந்த 14 முடிவுகள், மெதுவாக ஆனால் நிச்சயமாக, பொதுமக்களின் பணப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே நிதி நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories