அதாவது 10 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை குறைந்தபட்சம் ரூ.22 முதல் ரூ.25 வரை அதிகரித்துள்ளது. 76 மி.மீ நீளமுள்ள பிரீமியம் சிகரெட்டுகளின் விலை அதன் பிராண்டைப் பொறுத்து, 10 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட்டுக்கு ரூ.50 முதல் ரூ.55 வரை அதிகமாக இருக்கும்.
பிரபலமான நடுத்தர அளவிலான சிகரெட்டான வில்ஸ் நேவி கட் (76 மி.மீ நீளம்) ஒரு பாக்கெட் (10 சிகரெட்டுகள்) ரூ.95-க்கு விற்கப்பட்ட நிலையில், அதன் விலை ஒரு பாக்கெட்டுக்கு சுமார் ரூ.120 ஆக அதிகரிக்கிறது.
கோல்ட் ஃப்ளேக் லைட்ஸ், வில்ஸ் கிளாசிக் விலை எவ்வளவு?
கோல்ட் ஃப்ளேக் லைட்ஸ், வில்ஸ் கிளாசிக் மற்றும் வில்ஸ் கிளாசிக் மைல்ட்ஸ் போன்ற 84 மி.மீ நீளமுள்ள சிகரெட்டுகள் ஒரு பாக்கெட் (10 சிகரெட்டுகள்) ரூ.170-க்கு விற்கப்பட்ட நிலையில் இவற்றின் விலை ரூ.220 முதல் ரூ.225 வரை அதிகரிக்கிறது.
கிளாசிக் கனெக்ட் (97 மி.மீ நீளம்) போன்ற மெல்லிய சிகரெட்டுகள் 20 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட் ரூ.300-க்கு விற்கப்பட்ட நிலையில், அதன் அதிகபட்ச விலை இனிமேல் ரூ.350 ஆக இருக்கும்.