வாரத்தின் தொடக்க நாளான இன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தையான BSE குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex) 409 புள்ளிகள் சரிந்து 79,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை NSE குறியீட்டு எண்ணான நிப்டி (Nifty) 47 புள்ளிகள் குறைந்து 24,320 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
அண்மையில், ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்திற்கு சொந்தமான எல்லா நிறுவன பங்குகளும் சரிவடைந்துள்ளன. அதன்படி அதானி என்டர்பிரைசஸ்(adani enterprises), அதானி போர்ட்ஸ்(adani Ports), அதானி பவர்(adani Power), அதானி என்ர்ஜி(adani energy) உள்ளிட்ட பங்குகளின் விலைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.